This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label இஸ்மத். Show all posts
Showing posts with label இஸ்மத். Show all posts

குரு ஒன்று கண்டேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி யொன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


அல்லாஹ்வின் தூதர்
அகிலத்தின் நீதர்
அண்ணல் தம்பேரர்
கலீல்அவுனாம் நாதர்

அகஞானம் தங்கும்
அருள்ஞானம் பொங்கும்
மறைஞானம் எங்கும்
காதிரியாவில் அங்கம்

அருள் தந்த
அரும் பொருளே (2)

மருள் அழித்த
முழுமதியே (2)

குணங்கொண்ட சீலர்
குரு எந்தன் குரு அல்லவோ

வந்தேன்
அறிந்தேன்-நின்றேன்
வாழ்கிறேன்

குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

தனையறிந்த ஞானம்
தன்னை மறப்பதில்லை
விழிநோக்கும் பேதம்
ஒளிசேர்ப்பதில்லை

தானென்ற யூகம்
தன்னைஅறிவதில்லை
நானென்ற தேகம்
நீயாவதில்லை

ஞானம் தந்த
அண்ணல் நபி (2)

வாழ்வு தந்த
வேந்தர் வழி (2)

என்றென்றும் மாறாத
மனிதன் நல்ல மனித னல்லவோ

வந்தேன்
அறிந்தேன-நின்றேன்;
வாழ்கிறேன்


குரு ஒன்று கண்டேன்
இருள் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா

மதி ஒன்று கண்டேன்
விதி காண வில்லை
என்னென்று நான் சொல்ல லாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா


- கிளியனூர் இஸ்மத்

கவிதைக் களம்

சுயதரிசனம்

நீச்சல்
ஒரு பயிற்சி
நீந்துவதால்
உடல் வழுவாகும்
ஆனால்
ஞானத்தில் மூழ்கினால்
உள்ளம் தெளிவாகும்

மனிதர்கள்
நீந்தவேண்டும்
தன்னை அறிவதற்கு
அறிவில்
தெளிவதற்கு

பலர்
நீந்துகின்றோம்
கடக்கும்
கப்பலில்
விரையும்
விமானத்தில்
பொருள்தேடி

பொருள்
எண்ணத்தை
கறைபடுத்துகிறது
கறை மனிதர்களை
சிறைப்படுத்துகிறது
நாம்
பொருள் விளங்காமல்
பொருள் தேடுகிறோம்
தேடல் தரிசிப்பதற்கு
நம்மில் நிறைந்த
தூய்மையை
நேசிப்பதற்கு

நாம்
அழுக்கைக் கொண்டு
தூய்மையாக
நினைக்கிறோம்

அழுக்கு
தூய்மையை
தரிசிக்க முடியுமா?
தூய்மையை
நேசிப்பதற்கு
தூய்மை வேண்டும்!

இறைவன்
தூய்மையானவன்!

-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி

==================================================================
முழுமை

முழுமை என்றால்
மாபூத கற்பனையா
அல்லது
அணுவுக்கு அணுவான
கடுகளவு சிந்தனையா?

எண்களின்
கணக்குகள் எல்லாம்
முழுமையாய் ஆவதில்லை
முழுமையை கணக்குப் போட
முயன்றாலும்
முடிவதில்லை!

இல்லை என்ற சொல்லும்
முழுமையில் உண்டேயன்றி
முழுமை இல்லை என்று சொல்ல
எங்குமே முடிவதில்லை!

வார்த்தை ஜாலங்களும்
வலுவான பேதங்களும்
எடுக்கும் கோலங்களும்
எட்டாத ஞானங்களும்
முழுமையே அன்றோ!

முழு மதியைக் காண்கிறோம்
முக அழகைக் காண்கிறோம்
காட்சிகளும்
காண்பவைகளும்
முழுமையாய்
முழுமையில் நடப்பதன்றோ!

இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஆம்
இழப்பு என்பது
வெளியில் இல்லை!

ஓர் புள்ளியும்
முழுமையால்
உள்ளதன்றோ
பஞ்ச பூதமும்
முழுமையில் உள்ளதன்றோ!

நம்மை ஆராய்ந்து
பார்த்து பார்த்து
முழுமையாய் ஆகி நின்று
முழுமையாய் முயற்சி செய்தும்
முடிவாய்
தனித்துக் கூற
முழுமையே
எங்கும்
தனித்து இல்லை

அறியும் விதத்தில்
அறிந்துப் பார்த்தால் அன்றி
அறிந்ததும் முழுமை என்று
அறிய முடியாதன்றோ!

-மன்னார்குடி ஷேக்தாவுது ஹக்கியுல்காதிரி

வீடியோ காட்சி

தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பாடுகிறார் மற்றும் கிளியனூர் இஸ்மத்தின் அறிமுக உரை வீடியோ காட்சி

மனம் மகிழும் மாநபியின் மௌலுது நிகழ்ச்சி

கிளியனூர் இஸ்மத் இல்லத்தில் 15/02/2011 அன்று இஷா தொழுகைக்கு பின் மௌலுது ஷரீப் மிக சிறப்பாக மௌலானாமார்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கீழக்கரை அறிஞர் திருக்குர்ஆன் விரிவுரையாளர் மஹ்ரூப் காக்கா அவர்களும் சமூக ஆர்வலர் குத்தாலம் அசரப்அலி மற்றும் வானலை வளர்தமிழ் அமைப்பின் துணைத்தலைவர் கீழைராஸா மற்றும் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

மௌலுது நிகழ்ச்சிக்குப் பின் மஹ்ரூப் காக்கா அவர்களும் சையதுஅலி மௌலானா அவர்களும் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் சிறப்புகளை இயம்பினார்கள்.
நிறைவாக இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இஸ்மத் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞானசபையின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

- அதிரை M.அப்துல்ரஹ்மான்
















தியாகத் திருநாள்



(ஹஜ்பெருநாள் நல் வாழ்த்துக்கள்..!)

நபி இபுராஹிமுக்கு
நழுவிப்போன நனவில்
அவரைத் தழுவிக்கொண்டது
நான்-என்ற எண்ணம்...

தவமிருந்து தரித்த தனையனை
தத்துவமறந்து தழுவியதால்
அல்லாஹ் ஆணையிட்டான்
அறுத்துவிடு...

அவரின் ஏகஉள்ளமையில்
ஏற்பட்ட தடுமாற்றம்
பெற்றபாசம்
படைத்தவனை
எண்ணத்திலிருந்து
பாலையாக்கியது...

நான்-என்ற சுயநலத்தை
அறுத்து
நாம் என்ற சுயத்தை
அருந்த வேண்டிய ஆணை...

இருப்பதும் இல்லாமையும்
இறையாகும் போது
அறுப்பதும் அறுக்கப்படுவதும்
பேதமாவதில்லை...

அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...

இது தீர்க்கதரிசிக்கு
இறைவன் தந்த
தீர்ப்புமட்டுமல்ல
தீனோர்க்கு இட்டகட்டளை...!

- கிளியனூர் இஸ்மத்

தொழுதல்

வணங்க வேண்டும்
யாரை வணங்குவது?

இறைவனை
வணங்கவேண்டும்.!

அவனைத்தான்
வணங்குகின்றோமா?

சடங்குகளாய்
சரிந்துவிட்டால்
வணங்கும் கணக்கு
சரியாகிவிடுமா?

அறிந்து தெளிந்து
நிறைந்து
வணங்குவது
எப்போது?

வணக்கம்
வெளியிலிருப்பனுக்கு
வழங்கப்படுவதல்ல
நம்மில் நிறைந்தவனுக்கு
அர்ப்பணிக்கப்படுவது.!


- கிளியனூர் இஸ்மத்

அனைத்திலும் அனைத்துமாய்……

இறைவா…!
நீ என் நம்பிக்கையில்
நிழலாடுகிறாய்
நீ என்பது நம்பிக்கை மட்டும்தானா?

எதையும்
கண்டு உண்டு தொட்டு முகர்ந்து
புணர்ந்து…இப்படி
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
எனக்கு
அருபமான உன்னை
என் மனக்கண் முன்
உருவம் கொடுத்து
பார்க்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்
உருவத்திற்குள் உன்னை
மட்டுப்படுத்தி
கட்டுப்படுத்தி
மிகப் பெரியவான உன்னை
சிறுமைப்படுத்தி விடுவதாகுமே…!

கல்லைவைத்து
கடவுளை காண்கிறார்கள்
சிலர் சொல்லை வைத்து உன்னை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இருவருக்கும்
என்ன வித்தியாசம்?

கையேந்தி உன்னிடம்
கேட்கும் போதும்
கையை மேலே காட்டி
பேசும் போதும்
தனிமையான உன்னை
நான்
தனிமைப் படுத்தி விடுவதல்லவா…!

வணக்கத்தின்போது
என்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
அல்லது
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
வணங்கச் சொல்கிறாய்
அப்படியானால்
நீ என்பது எண்ணமா?

உன் திருநாமத்தை
உச்சரித்தால்
நல்லடியார்களின் உள்ளம்
நடுங்கும் என்கிறாய்
அப்படியானால்
நீ என்ன அச்சமா?

எந்த அடியானாவது
தன் தூக்கத்தை விட்டு
பின்னிரவில் எனக்காக எழுந்து
வணங்குகின்றானா?
அடிவானத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று வேறு படுத்தி கூறுகின்றாய்
நீயென்ன துவைதமா?

என் பிடரியின் நரம்பிற்கும்
சமீபமாய் இருக்கும்
உன்னை
நான் விளங்காதபோது
உன் வேதத்தை படித்துவிட்டு
போதனை செய்வதால்
நான் என்ன விளக்கவாதியா?
விளக்கமே இல்லாமல்
விழுந்து விழுந்து
உன்னை வணங்கிக் கொண்டிருப்பதால்
நான் என்ன வணக்கவாதியா?

வேதத்தை தந்தது
வேடம் களைவதற்குத் தானே
வேதம் படித்திருக்கிறேன் என்று
வாதம் செய்வதற்கா.?
வேடத்தை களைக்காமல்
வேதத்தையே படித்துக்கொண்டிருப்பதால்
நான் என்ன சீர்திருத்தவாதியா…?

ஒற்றுமையென்னும் கயிற்றை
பலமாக பற்றி பிடிக்கச் சொன்னாய்
பிரிந்திருப்பவைகளை
ஒன்றுப்படுத்துவதுதானே ஒற்றுமை
அதுதானே ஏகத்துவம்
இதில் இருக்கிறதே பல தத்துவம்
அந்த கயிற்றை பலமாகப்பிடிப்பதற்கு
அவர்களின் கைகளில் பலமில்லையே…!

நெருப்பையும் களிமண்ணையும்
வேற்றுமைப் படுத்திய
ஷைத்தானின் எண்ணம்
நீவேறு
உன் படைப்பினங்கள் வேறு என்று
ஒற்றுமையை துவைதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உன்னை வேறுபடுத்துவதால்
அவர்களிடம் ஒற்றுமையில்லை

ஷைத்தானின் கைகளில்
வேதமிருப்பதால்
அப்பாவி கண்களுக்கு வேதம்தானே தெரிகிறது
வழிகெடுக்கப்படுவதை
அவர்களின் விழிக்கூட நம்ப மறுக்கிறதே…!

ஒரே சமுதாயமாக
வாழவேண்டியவர்கள்
ஒரு ஊருக்குள் பலபிரிவினர்களாக
பிரிக்கப்படுகிறார்கள்
ஒற்றுமையிலிருந்து சிதைக்கப்படுகிறார்கள்
இறiவா
நீ எங்கோ இருந்துக் கொண்டு
இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
அதனால்
எண்ணத்தில் தூரமிருக்கிறது.

நீ அனைத்துமாக
அனைத்திலும் நீயாக இருந்து
இயங்குகின்றாய்
அனைத்திலும் நீ இருக்கும்போது
அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
இதை
எப்போது விளங்கப்போகிறார்கள்.?

-கிளியனூர் இஸ்மத்

மாநபியின் மாணிக்கமே வரவேண்டும்...

மாநபியின் மாணிக்கமே
வரவேண்டும்-உங்கள்
மணம் நிறைந்த அருளினை
அண்ணலே தரவேண்டும்

ஆன்மீக ஞானம்தேடி
அலைபாயும் மனமே
ஆதரவாய் கரம் கொடுக்கும்
எம்குருவின் குணமே

கதியிழந்த உயிர்களுக்கு
மதிநிறைக்கும் மhமதியே
விதிதேடும் விடைகளுக்கு
வீதி தந்த ஒளிவிளக்கே


---- மாநபியின்

நான்-னை நான்-னென்று
நவிழ்கின்ற நாதரே
நான்-னில் நாயகனை
நயம் செய்த சீலரே

பூரணத்தை புரிந்துணர்ந்து
புயலாய் வந்த பூமானே
புறம்பொருள் நீக்கமற-எம்மை
புனிதராக்கும் எம்மானே

---- மாநபியின்

ஏகத்துவ உண்மையினை
ஏற்றிவைத்த தீபமே
ஏக்கங்கள் என்னிடத்தில்
ஏற்றம்செய்யும் எஜமானே

அண்ணலாரின் அகமியத்தை
அணிவகுத்த அற்புதமே
எண்ணுயார் எண்ணத்தை
வண்ணம் தந்த வான்மதியே

---- மாநபியின்

விஞ்ஞானம் பேசும் மனிதன்
விகமனம் மானதேனோ
மெய்ஞ்ஞானம் கற்றவருக்கு
அஞ்ஞானம் நுழைந்ததேனோ

பேரின்பம் படித்ததாய்
பெருமைகள் கொண்டதேனோ
சிற்றின்ப சீற்றத்திலே
சிறகுகள் ஒடிந்ததேனோ

---- மாநபியின்

ஞானக்கலையினிலே
மானம் படிக்கவேனும்
படித்த ஞானமதிலே
மனிதனாய் மலரவேனும்

குருவிடம் கற்றக்கல்வி
பெருநன்றி மறந்ததேனோ
குறைமதி பெற்றதினாலே
வருந்திடும் வாழ்க்கையோடும்

---- மாநபியின்

சத்தியத்தின் நாவினிலே
சத்தியம் பேசிடுமே
சத்துரு கனைகளிலே
சாம்பலாகி போகனுமே

சன்னதி வந்துவிட்டோம்
சரணானோம் சந்திரனே
சாந்தியும் தந்தருள்வீர்
சபையோர்க்கு சமுத்திரமே....
---- மாநபியின்



-
-
- விகமனம் - துர்நடத்தை
- சத்துரு---எதிரி

இசையில்லா சங்கீதம்

இஸ்லாமிய பாடகரான அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடிய புதிய பாடல்.
பெருமானார் (ஸல்) அலை அவர்களை பற்றியும் ஞானமறிந்தால் அதன் பயனைப் பற்றியும் அந்த பாடலின் சுருக்கமான கருத்தாகும்.
இலங்கை வெலிகமையில் இமாம் ஸய்யது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் அவர்களின் முன்னிலையில் இந்தப் பாடல் அரங்கேற்றப் பட்டது.
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
இந்தப் பாடலை எழுதியவர் கிளியனூர் இஸ்மத்.