This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ஆலிம் புலவர். Show all posts
Showing posts with label ஆலிம் புலவர். Show all posts

அமீரக அமைப்புகளில் ஆலிம் புலவர்

அமீரகத்திற்கு சங்கைமிகு ஷெய்குனா அவர்களுடன் வருகைப்புரிந்த மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரிய் அவர்களை அமீரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை புதன்கிழமை தோறும் இஷா தொழுகைக்கு பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியினை அதன் தலைவர் ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

4.5.2011 புதன்கிழமை அன்று மரியாதைக்குரிய கலீபா எஸ்.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சுன்னத்வல் ஜமாஅத் ஆதரவாளர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஜனாப் முஹம்மது மஹ்ஃரூப் காக்கா அவர்கள் உரையாற்றியபோது "நான்கு ஆண்டுகளாக இந்த அமைப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது இதுநாள் வரையில் யாருக்குமே நாங்கள் பொன்னாடை அணிவித்து கொளரவப்படுத்தியது கிடையாது அதில் ஏதும் குறை ஏற்பட்டுவிடுமே என்பதினால் அதை தவிர்த்து வந்தோம். ஆனால் அருமை நாயகம் (ஸல் அலை) அவர்களை தனது கவியினால் புகழ்ந்து பாடிய ஆலிம் புலவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை என்றால் குறைவந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொன்னாடை அணிவிக்கின்றோம்" என்று வரலாற்று சம்பவங்களை எடுத்துக் கூறி ஆலிம் புலவர் அவர்களுக்கும் பாடகர் தேரிழந்தூர் தாஜிதீன் அவர்களுக்கும் அணிவித்தார்கள்.


தேரிழந்தூர் தாஜிதீன் ஆலிம்புலவர் எழுதிய பாடல்களை பாடிக்காண்பிக்கின்றார்

ஆலிம்புலவரின் சிறப்பு சொற்பொழிவு

கீழக்கரை ஜனாப் ஹாஜி சாதிக் காக்கா அவர்கள் ஆலிம் புலவருக்கு பொன்னாடை அணிவிக்கிறார்கள்

தேரிழந்தூர் தாஜிதீனுக்கு மௌலவி தாவூத்அலி மன்பஈ பொன்னாடை அணிவிக்கிறார்கள்

அமீரகத்தில் ஆறு ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களின் அமைப்பான வானலை வளர் தமிழ் அமைப்பு மாதந்தோறும் துபாய் கராமா சுவிஸ்ஸ்டார் பவனில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

இந்த மாத நிகழ்ச்சசிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலீபா ஆலிம் புலவர் அவர்களையும் துபாய் சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களையும் அழைத்து கௌரவித்தார்கள்.

இந்த அமைப்பில் பலதரப்பட்ட சமய நல்லிணக்கமுடையர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களுக்கு அபுதாபி பழனி அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்கள்


கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு முத்துப்பேட்டை சர்புதீன் பொன்னாடை அணிவிக்கிறார்கள்



கலீபா ஆலிம் புலவர் அவர்களுக்கு வானலை வளர் தமிழின் பொதுச் செயலாளர் சிம்மபாரதி நினைவு பரிசு வழங்குகிறார்

கிளியனூர் இஸ்மத் கலீபா ஏ.பி.சகாபுதீனைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


அதிரை சர்புதீன் கலீபா ஆலிம்புலவரைப்பற்றிய அறிமுக உரை நிகழ்த்துகிறார்


கலீபா ஏ.பி.சகாபுதீன் உரையாற்றுகிறார் கவிஞர்களின் அமைப்பை வாழ்த்தி வானம் என்பது எல்லையற்றது அதுபோல் இந்த அமைப்பு வளர்ந்து வரவேண்டும் ஒவ்வொரு மனிதனும் தன்னைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சுயசிந்தனையை ஏற்படுத்த ஊக்கமான உரைநிகழ்த்தினார்கள்.




வானலை வளர் தமிழின் ஆலோசகர் காவிரிமைந்தன் வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்

வானலை வளர் தமிழ் அமைப்பின் மாத இதழான தமிழ்தேரை வழங்குகிறார் லெட்சுமிநாராயணன்



அங்கு நடந்த கவியரங்கத்திற்கு பிறகு கலீபா ஆலிம்புலவர் சிறப்புரையும் அத்துடன் ஜனநாயகம் எனும் தலைப்பில் கவிதையும் வாசித்தார்கள்


இந்நிகழ்ச்சியில் வானலை வளர் தமிழ் நிர்வாகிகள் கீழைராஜா, சிம்மபாரதி, காவிரிமைந்தன், கிளியனூர் இஸ்மத், பழனி, அத்தாவுல்லாஹ், முகவை முகில், லெட்சுமிநாராயணன், அபுமைமுனா, துரைமலைவேல், நிலவன், மற்றும் பல கவிஞர்களும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள்.

மக்காவில் அடிமை மதீனாவில் காதலர்

இதயமே!
எம்பெருமானை நேசி!
அவர்களைப்பற்றியே
எப்போதும் யோசி!

அண்ணலை நேசிக்காத நெஞ்சம்
துடிப்பதை விட வெடிப்பதேமேல்!
அவர்களின் நேசம் நிரம்பாத ஈமான்
கஃபா இல்லாத மக்கா போன்றது!
ஆயத்துகள் இல்லாத குர்ஆன் போன்றது!
ஸஜ்தா இல்லாத தொழுகை போன்றது
இரசூலை நேசிக்காமல்
இறைவனுக்கு மட்டும் ஸஜ்தா செய்து
கொண்டிருந்தால்
போதும் என நினைக்காதே!
சற்றுயோசித்தால்- நீ யாருக்கு
ஸஜ்தா செய்து கொண்டிருக்கின்றாய்
என்பது புரியும்!

ஆமீன் சொல்வதால் மட்டும்
மூமினாக முடியுமா?-நீ
உன்னை-மனைவி-தாய்-எனும்
பெண்ணை
குழந்தை-தந்தை எனும் கண்ணை
அனைத்தையும் விட அவர்களை
நேசித்தால்தான்
மூமின் எனும் ஹக்மார்க் முத்திரை
கிடைக்கும்!

தஸ்பீஹ்சொல்வதில் மட்டும்
இன்பம் காண்கிறாயே!- இறைவன்
ஸலவாத்து கூறிக்கொண்டிருப்பதை
மறந்து போனாயா?

இறைவனின் சந்நிதானத்திற்கு
நீ மட்டும்- நாயகமில்லாமல்
சென்றுவிடலாம் எனும் தலைக்கனமா?

சிலருக்கு
மக்கா சென்று விட்டு மதீனா செல்லாமல்
திரும்பிவர யோசனை!
வரலாற்றில்-மதினாவில்
அபீஅய்யுப் அன்சாரி(ரலி)அவர்களின்
வீட்டையும்
மஸ்ஜிதுன் னபவீயின் இடத்தையும்
ஒர் ஒட்டகை தானாகக் கண்டு நின்றதே!
உனக்கு
ஒட்டகையின் உணர்வும் ஒட்டிப்போனதோ!

மூமின்களே-நீங்கள்
மக்காவில் அடிமையாக நிற்கின்றீர்கள்
மதீனாவில்-நாயகக்
காதலர்களாக பதவி உயர்வு
பெறுகின்றீர்கள்.
இறைவன்
நாயகத்தைக் காதலிக்கும்
அடிமைகளையே
விரும்புகின்றான்!

- ஆலிம் புலவர்
நன்றி-மறைஞானப் பேழை

பன்னிரெண்டு நாளிதே பாடல்

"பன்னிரெண்டு நாளிதே"-
பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை மிக அழகாக பொருள்பட எழுதி உள்ள பாடல் இது...நீளமான பாடலாக இருப்பதால் யூடிப்பில் அப்லோட் ஆக மறுக்கிறது...
இந்தப்பாடலை இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்கள் எழுதி உள்ளார்கள்.
இதைப்பாடியவர்கள் அபுல்பரக்காத் ஹக்கியுல்காதிரி அவர்களும் எஸ்.உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி (ஆலிம்புலவர்)அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப்பாடல் பிரபலமாகிவருகிறது...


நம்மைப் போன்ற மனிதரல்ல நாயகமே

நம்மைப்போன்ற மனிதரென- நீ
நாயகத்தை எண்ணாதே

இந்த பாடலை திண்டுக்கல் உசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி அவர்கள் எழுதி இஸ்லாமிய தமிழ் உலகில் புகழ்பெற்று விளங்கும் ஆன்மீப்பாடகர் இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி அவர்கள் பாடியுள்ள பாடல்.
தமிழ் இஸ்லாமிய உலகில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் வரவேற்ற பாடலின் கருத்துக்கு படங்களை இணைத்து மூவிப் பாடலாக இங்கே தந்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்.

அவ்ன் நாயகர் 74

1. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருமரபாகிய அஹ்லபைத்தில் 34ஆவது தலைமுறைப் பேரராக உதித்தது.

2. முஹிய்யத்தீன் ஆண்டகை(ரலி) உதித்த பகுதாதில் அவ்ன்நாயகரின் பாட்டனார் ஜமாலிய்யா மௌலானா (ரலி) பிறந்து - வளர்ந்து - வாழ்ந்து - படைத்தளகர்த்தராக பணியாற்றியது.

3. தன்னிகரற்ற மாமேதையாக அறபு மொழிக் களஞ்சியமாக குத்புல்பரீதாக விளங்கிய மாமேதை யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் மகவாகப் பிறந்தது.

4. புகாரி ஷரீபுக்கு அறபு மொழியில் விரிவுரை எழுதிய பல்கலைக் கழகமான தந்தையிடமே அறபுக் கல்வியை - ஆலிமுக்குரிய கலைகளைப் படித்துக் கொண்டது.

5. தந்தையார் தோற்றுவித்த "தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா"வை தொடர்ந்து வழி நடத்தும் காமில் ஷைகாக உயர்ந்தது.

6. தந்தையாரைப் போலவே அறபு மொழியில் பாக்களும் இயற்றுவது.

7. முன்னோர்களிலிருந்து இவர்கள்வரை "விலாயத்" எனும் வலித்துவம் அறுபடாமல் தொடர்ந்து வருவது.

8. தமிழ் ஆங்கிலம் பயின்று இலங்கையில் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து கல்வி அதிகாரியாக உயர்ந்தது.

9. தாங்களே தமிழ் மொழியின் உயர் கல்வியைப் படித்து தமிழ் வித்துவான்களும் திகைக்குமளவு தமிழாற்றலை வளர்த்துக் கொண்டது. தமிழில் அத்துணை பா வகையிலும் இலக்கணப் பிழையின்றி மரபுக் கவிதைகள் யாப்பது.

10. முந்தி வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் போல சித்திரக்கவி வரையும் ஆற்றல் பெற்றிருப்பது.

11. அழகான ஓவியங்கள் வரையும் தனித்திறன் பெற்றிருப்பது.

12. திரு.வி.க. போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்களைப் போல தீந்தமிழில் உரைநடைகள் எழுதுவது.

13. அறபு மொழியிலிருந்து அழகு தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பது.

14. ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர் - இறையருட்பா - மகானந்தாலங்காரமாலை - நாயகர் பன்னிரு பாடல் - அற்புத அகில நாதர் - இறைவலிய் சய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களும் பேரின்பப்பாதை - யாசீன் (ரலி) - தாகிபிரபம் - ஹகாயிகுஸ்ஸபா போன்ற உரைநடை நூற்களும் பர்ஜன்ஜீ மௌலிது - ரிஸாலா கௌதிய்யா - பத்ருமவ்லிது - துற்பத்துல் முர்ஸலா ஆகிய மொழிபெயர்ப்பு நூற்களும் உமர் (ரலி) புராணம் எனும் காவியமும் யாப்பிலக்கண நூல் ஒன்றும் என பதினாறு நூற்கள் எழுதியது இன்னும் பல நூற்கள் எழுதிக் கொண்டிருப்பது. தந்தை யாசீன்நாயகம் அவர்களின் அறபு - அறபுத் தமிழ் அகராதியை பல புதிய சொற்களுடன் பதிப்பிப்பது.

15. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான முரீதுகளின் குருவாக விளங்குவது.

16. முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) - அப்துல் கறீம் ஜீலி (ரலி) போன்ற மாபெரும் ஞானிகள் நிலை நின்று உலகுக்கு எடுத்தோதிய வஹ்தத்துல் வுஜூது கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு உலகுக்கு வெளியாக்குவது.

17. ஷரீஅத்தை முழுமையாகக் கடைப்பிடித்து நடப்பது.

18. சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு உறுதுணையாக இருப்பது.

19. முன்னோர்கள் ஸாலிஹீன்கள் வழி நின்று மௌலிது - பாத்திஹா - ஜியாரத் போன்ற செயல்களை எடுத்து நடத்தி - பிறரையும் நடத்தத் தூண்டுவது.

20. வஹ்ஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது.

21. எத்துணை எதிர்ப்புகள் வந்த போதும் கொண்ட கொள்கை உறுதிமாறாமல் நிலைநின்று எதிரிகளை வெல்வது.

22. ஞானம் என்ற பெயரில் அறிவுக்கொவ்வாத மூடக் கொள்கையைக் கொண்டிருப்பதை தெளிந்த அறிவால் நீக்குவது.

23. எண்ணற்ற கராமத்துகளை நிகழ்த்தியது- நிகழ்த்தி வருவது. முன்னால் பார்த்து அறியாதவர்களின் கனவில் காட்சி தந்து அவர்களுக்கு நேர்வழி காட்டியது.

24. மார்க்க அறிஞர்கள் - உலகியல் அறிவு பெற்ற படித்தவர்கள் - பட்டதாரிகள் டாக்டர்கள் என பலதரப்பட்டவர்களை முரீதாக பெற்றிருப்பது.

25. ஏழை பணக்காரர் படித்தவர் பாமரர் அனைவரையும் சமமாக நடத்துவது.

26. நீண்ட நேரம் உரையாற்றாமல் சுருக்கமாக - எளியமுறையில் ஞானத்தை விளங்க வைப்பது.

27. குர்ஆன் - ஹதீஸில் உள்ளவற்றை மறுக்காமல் அப்படியே நம்பி அவற்றின் உள்ளார்த்தமான தத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது.

28. சூனியம் மலக்கு ஜின் நப்ஸ் ஆலமுல் பர்ஜக் - ரூஹ_ - மலகூத் - ஜபரூத் போன்றவைகளின் உண்மைத் தத்துவத்தை உரைத்தது.

29. குர்ஆன் ஷரீபின் அதிமுக்கியத்துவத்தை விளங்க வைத்தது.

30. ரசூல்(ஸல்) அவர்களின் அந்தரங்கத்தை விளங்க வைத்தது.

31. அவர்களின் நேசத்தை ஆழமாக விளங்கவைப்பது.

32. அல்லாஹ்வை இன்னதென்று விளக்கி குழப்பமில்லாமல் விளங்கவைப்பது.

33. நம் மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு நாம் கேட்காமலே விடைபகர்வது.

34. நாம் வைக்கும் கோரிக்கைகளை அன்போடு கேட்டு ஏற்று அல்லாஹ்வின் அருள் உதவியால் நிறைவேற்றித் தருவது.

35. இறைஞானத்தை மத பேதமின்றி ஒன்றுபட்டு சிந்திக்க ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைத் தோற்றுவித்து முப்பத்து ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வருவது.

36. ஆன்மீகத்திற்கென மறைஞானப் பேழை மாத இதழைத் தொடங்கச் செய்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரச் செய்வது.

37. மார்க்க கல்வி - உலகக் கல்வி தஸவ்வுப் ஆன்மீகக் கல்வி தொழிற்கல்வியைக் கற்றுத் தரும் "மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன்" அறபுக் கல்லூரியை நிறுவி 10 மாணவர்களிலிருந்து இன்று நூறு மாணவர்கள் பயில வசதி செய்து "யாஸீனிய்" எனும் பட்டமும் வழங்கி நிர்வகித்து வருவது.

38. அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவி சமூக சேவை செய்து வருவது.

39. எழுபத்து நான்கு வயதிலும் சற்றும் ஒய்வின்றி பல நாடுகளுக்குச் சென்று வருவதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருப்பது.

40. மிகவும் எளிமையாக உடை அணிவது.

41. தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்வது.

42. விருந்தினர்களை அவர்கள் வியந்து மலைக்கும் வண்ணம் கவனித்து கவுரவிப்பது.

43. பாராட்டு முகஸ்துதி அறவே வெறுப்பது.

44. முரீதுகளுக்கு தாங்கமுடியாத அமல்கள் அவ்ராதுகள் என அதிகச்சுமைகளை சுமத்தாமலிருப்பது.

45. ஏழைகளின் அழைப்பை ஏற்று அவர்களின் இடத்துக்கேசென்று துஆச் செய்து மகிழ்விப்பது.

46. குழந்தைகள்மீது பேரன்பு செலுத்துவது குழந்தைகள் வலிமார்கள் என்று இதுவரை யாரும் சொல்லாத உண்மையை எடுத்துரைத்தது.

47. முரீதுகள் அண்ணன் தம்பிகளைவிட ஆதரவான உறவு உள்ளவர்கள் என அறிவித்தது.

48. பணக்காரர்கள் ஏழைகளின் வீட்டில் பெண் எடுப்பது.

49. உலகை வெறுக்கத் தேவையில்லை. உலகம் இன்னதெனப் புரிந்து நன்கு படித்து - நன்கு சம்பாதித்து சொந்த வீடு வாகனங்கள் என மகிழ்ச்சியாக வாழ்வதோடு ஏழைகளை நன்கு கவனித்து உதவி செய்து உயர்த்த வேண்டும் என உரைத்து அதன்படியே முரீதுகள் வாழச் செய்வது.

50. எந்த நேரத்திலும் மனம் சோர்வடையாமல் எந்த ஓர் இலக்கையும் தைரியமாக அடையஊக்கம் தருவது.

51. அவர்களின் கரம் பிடித்தவர்கள் எவரும் இருந்த நிலையிலிருந்து இறங்காமல் மேலே மேலே முன்னேற அறிவுரை தருவது.

52. முரீதுகளைப் பல ஆபத்துகளிலிருந்து கண்கூடாகக் காப்பாற்றி வருவது.

53. கொடிய நோய்களான தீர்க்க முடியாத நோய்களை நீக்கி சுகவாழ்வை அருள்வது.

54. குழந்தைவரம் கேட்டவர்களுக்கு அவர்கள் நம்பியபடி குழந்தை பாக்கியத்தை பெற வைப்பது.

55. ஞான விளக்கத்தில் முதிர்ந்தவர்களாக தங்கள் முரீதுகளை உயரச்செய்தது.

56. எமக்கு கூட்டம் தேவையில்லை. எம்மிடம் ihஅத் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஞானத்தை விளங்கி இறைவனை அறிந்து வாழ்ந்தாலே போதுமென்பது.

57. உள்ளே மஃரிபத்தும் வெளியே ஷரீஅத்தும் நிறைந்த முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்பது.

58. புதிய சுன்னத் வல் ஜமாஅத் பரிசுத்தமான சமுதாயம் அமைய வேண்டும் என ஆசைப்படுவது.

59. அனைத்து மார்க்கங்களின் அடிப்படையான ஞானத்தைச் சிந்தித்து அதில் மனிதர்கள் ஒன்றுபட்டால் வேற்றுமைகளற்ற ஒற்றுமையான மனித சமுதாயம் உருவாகும் என வழிகாட்டுவது.

60. தொழுகையில் பல எண்ணங்கள் வருகின்றன அதை நீக்க வழி என்னவென்று வினவியபோது அந்த எண்ணமும் ஹக்கே என எண்ணிவிடுவதே அதற்குரிய வழி என்று விடைபகர்வது.

61. ஹக்கும் ஹல்கும் இரும்பும் நெருப்பும் போல என காலம் காலமாக ஞானிகள் கூறிவந்த உதாரணத்திற்கும் மேலாக அது ஒருவகை படித்தரமே ஆனால் உயர்ந்த நிலை கடலும் அலையும்போல இருப்பதுதான் ஹக்கும் ஹல்கும் என தெளிவுபடுத்துவது.

62. எதை எதையோ பாவம் என நினைத்திருக்க தன்னை அறியாதிருப்பதே பாவம் என தெளிவுபடுத்துவது.

63. ஹக்கு வெளியாகி இருக்கும் ஹ+வல்ஆன கமாகான என்பதனை சுருக்கமாக "தானே தன்னில் தானானான்" என சுலோகமாக்கியது.

64. இறைவன் எப்போதும் மறவாமலிருக்க எந்நேரமும் திக்ரு செய்யுங்கள் என சுப்ஹானல்லாஹ் - மாஷா அல்லாஹ் - அல்ஹம்துலில்லாஹ் எனவெல்லாம் வரிசையாக அச்சிட்டுப் பள்ளிகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் அனைத்திலும் ஹக்கைக் காண்பதே ஹக்கை கணந்தோறும் மறவாமல் இருப்பதற்குரிய வழி யென்று நயமாக உரைப்பது.

65. மனிதன் இருக்கும்போது அவனுக்கு அறிவுண்டு எனக்கருத வேண்டாம் இறந்தாலும் அவனுக்கு அறிவுண்டு என அறிவுறுத்துவது.

66. ஹக்கின் ஒன்றிப்பே சுவர்க்கம் என சொர்க்கத்தை அறிமுகம் செய்வது.

67. பொருள்களில் வித்தியாசம் காணாதிருப்பதே ஃபாவில் முதல்படி என ஃபனா நிலையை விபரிப்பது.

68. ரசூல்(ஸல்) அவர்கள் தம் உடலை கவனித்தால் அவர்கள் ஹக்கின் அப்து. ஹக்கின் பகுதிகளில் ஒருபகுதி. அவர்கள் தம் சூக்குமத்தையும் தூலத்தையும் சேர்த்துக் கவனிக்கும் போது ஹக்கான(இறையின் பூரணத்)தோன்றல் என பெருமானார் (ஸல்) அவர்களின் அகமியத்தை உணர்த்துவது.

69. கவலையும் வேண்டாம் சந்தோசமும் வேண்டாம் ஹக்கே நமக்கு வேண்டும் என வாழ்க்கை வழிகாட்டுவது.

70. உலக வாழ்க்ககையை தவ்ஹிதில் சிந்தித்தால் எல்லாவற்றிலும் மோட்சம் காணலாம் என உரைப்பது.

71. எப்போதும் நேர்மையாக நடக்கவேண்டும் என வலியுறுத்துவது. கோபம் பொறாமை தற்பெருமை இவற்றை ஒழித்தே தீரவேண்டும் என வற்புறுத்துவது.

72. தொழுகையை சந்தோசமாக தொழச் சொல்வது.

73. முரீதுகள் எப்போது நினைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் உயிரோடு உயிராக கலந்து அணுவோடு அணுவாக பதிந்து எந்த சந்தேகமுமின்றி உதவிக்காப்பது.

74. இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும். எம்மை இந்த ஜமானில் அண்டியவர்கள் பெறும் பேறு பெற்றவர்களே!
எம்மைவிட்டு கைசேதப்பட்டவர் எம்மைப் போன்றவர் இதற்கு பின்னால் எவரும் தோன்றமாட்டார். இதுவே ஹக்கின் பஷாரத் (நன்மாராயம்)ஆகும் என முத்திரை பதித்தது.....!


நன்றி---- ஆலிம் புலவர்

நன்றி--- மறைஞானப்பேழை

நம்மைப்போன்ற மனிதரல்ல நாயகமே...

"நம்மைப்போன்ற மனிதரென-
நீ நாயகத்தை என்னாதே
பொய்மையும் உண்மையும்
நன்மையும் தீமையும்
பொதுவென்று சொல்லாதே
அல்லாஹ்வின் தூதரை நீ
அறியாமல் பேசாதே
ஆகாத பழித்தேடி
அடிவாங்கி சாகாதே".........

இந்தபாடலை எழுதியவர்
திண்டுக்கல் ஆலிம் புலவர் உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி

இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி பாடிய பாடலை பாடியுள்ளார்.

ஆடியோ பாடலை படங்களுடன் வீடியோ படுத்தி உள்ளேன்...கேட்டு மகிழுங்கள்...


இல்லையே...


பராஅத் இல்லை
மிஃராஜ் இல்லை
27ல் லைலத்துல் கத்ரு இல்லை
மீலாது இல்லை
மௌலூது இல்லை
முஹர்ரம் 10 ஆஷ_ரா இல்லை
கர்பலா இல்லை
ஈஸால் தவாபு இல்லை
பாத்திஹா இல்லை
கத்தம் இல்லை
பெருமானாரின் ரவ்ழாஷரீப்
ஜியாரத் இல்லை
மத்ஹபுகள் இல்லை
நான்கு இமாம்கள் இல்லை
நிய்யத் இல்லை
நேர்ச்சை இல்லை
வலிமார்கள் இல்லை
கராமத் இல்லை

இல்லை…இல்லை…இல்லை

புதிய ஷைத்தான்கள்
ஏன் இவ்வாறு குழப்புகிறார்கள்?
முடிவாகப் புரிந்து கொண்டேன்!
இவர்களுக்கு இதயத்தில்
ஈமான் இல்லை
மண்டையில் மூளையில்லை….!

- ஆலிம் புலவர்

சமய நல்லிணக்க விழா


அனைவருக்கும் இணக்கம்!
என்ன?
வணக்கமா?இணக்கமா?
எழுத்துப் பிழையா?
வார்த்தை தடுமாற்றமா?
இல்லை!...

வணக்கம் சொல்வதில்
சிறிது ஆபத்தும்
கலந்து இருக்கிறது!

காந்திஜியைக் கொன்ற
கோட்சேயின் கையில்
மறைந்திருந்த
துப்பாக்கி போல்!

இன்று
வணக்க மனிதர்களிடம்தாம்
பிணக்கும் மிகைத்திருக்கிறது!
வணக்கம் என
மனதார-வாயாராக் கூறும்
தகுதி வரும்வரை
சிறிது காலத்துக்குச் சொல்வோம்
இணக்கம்!
சொல்லப்போனால்
இணக்கம் தான் வணக்கமே!


இது காந்திக்குப் பிடித்த விழா!
காந்திகிராமத்தில்
அவரின் மடியிலேயே நடக்கும்
பொருத்தமான விழா!
அவர்தான்
சமய நல்லிணக்கத்திற்காக
சாவை சந்தித்த சத்தியமனிதர்!
காந்தி வாழ்கிறார்...இன்னும்...
நம் வடிவங்களில்!அதனால்தான்
அவரது நல்லிணக்க விதைகளை
நாட்டில் நாம் விதைக்கிறோம்!
காந்தி வாழலாம்-ஆனால்
கோட்சேக்கள் வாழ்வதில்
நியாயம் இருக்கிறதா?
இந்திய விடுதலை பெற்று
அறுபதாண்டுகள் கடந்த பின்னும்
வேற்றுமைச் சிந்தனைகளின்
வேர்கள் அழியவில்லையே!
அதனால்தான்
காந்தியை
காந்தி நகரிலிருந்து
காந்திகிராமத்திற்கு
அழைத்திருக்கிறோம்!
கோட்சேக்கள்
தலை எடுக்கும் போதெல்லாம்
காந்தியும் அவதரிப்பார்
அழியாமல்!மறையாமல்!

அன்பர்களே!
நாம் அனைவரும்
இதயங்களால் நடந்து வந்து
இங்கு அமர்ந்திருக்கிறோம்!
கை குலுக்கினால்
பிரிந்து விடுமென்று
மெய்குலுக்கி மனம்
விரிந்து மலர்ந்திருக்கிறோம்!
சமூகத்தில் அவ்வப்போது
பற்றிக்கொள்ளும் நெருப்பு
ஊரையே அழித்துவிடக் கூடாதென்ற
சமூக அக்கறை!

ஒருவருக்கொருவர்
கொடுத்து வாங்குவதற்காக
சம்பந்திகள் போல இங்கு
சங்கமித்திருக்கிறோம்!
சமயங்கள் எனும்
சமையலறையில்
அவரவர் தயாரித்த
அறுசுவை உணவை
பரிமாறிக் கொள்ள
ஆவலோடு கூடியுள்ளோம்!

இஸ்லாமிய பிரியாணி
சனாதனப் பொங்கள்
கிறித்துவ அப்பம்-என
வகை வகையாக
வண்ண வண்ண உணவுகள்!
பசிக்கும் ஒருவன்
இதில் எதைச் சாப்பிட்டாலும்
நிச்சயமாக பசி அடங்கும்!
உணவுதான் வேறுவேறு தவிர
உள்ளடக்கம் ஊட்டச்சத்துதான்!
இறைவனை அடையவேண்டுமென்ற
மனிதனின் பசியை அடக்கவே
மதங்கள்-மார்க்கங்கள் தோன்றின!
அந்தப் பசியே
வெறியாக வெடிக்கும்போது
பத்தும்-அன்பு-பண்பு-நட்பு-பாசம்
என பத்தும் பறந்து போகிறது!
பக்தி கத்தியாகப் பரிணாமம் பெறுகிறது!
சடங்கு எனும் கிடங்கில் விழும்போது
அறிவு முடங்கிப் போகிறது!
அரிசியை உண்ண ஆவல் கொண்டவன்
ஆத்திரத்தில் அவசரம் அவசரமாக
உமியை உண்டு
வயிறு ஊதி அலைகின்றான்!
பயிரை வளர்ப்பதற்காகப் பாத்திகட்டி
களையை வளர்க்கிறான்!
முத்துக்களை எறிந்துவிட்டு
சிப்பிகளைச் சேகரிக்கிறான்!
பூக்களைப் பிய்த்து எறிந்து
நாரை அணிந்து
நாட்டியமாடுகிறான்.!
மதங்களின் உள்ளடக்கமான
தத்துவ மாத்திரைகளை எறிந்து விட்டு
கனமாக-அதன்
அட்டைகளை விழுங்குகிறான்.!
அமைதியான வடிவமான இறைவனிடமிருந்து
அன்பு வடிவமான மனிதப் புனிதர்களின்
வழியாக வந்ததே
மதங்கள்-மார்க்கங்கள்-அறநெறிகள்
ஆண்டவனோ-அவர்களோ
அன்பதைத் தவிர வேறு எதையும்
போதித்ததில்லை.!

ஆனால்
காஷ்மீர்-அமர்நாத்
குஜராத்-அகமதாபாத்
ஒரிஸ்ஸா-பெங்களுர்
குடைப்பாறைப்பட்டி-நத்தம்
எதை உணர்த்துகின்றன?
பகுத்தறிவுப் பகலவன்
பெரியார் உரைத்ததைப்போல்
மதங்கள்-வேதங்கள்-தோற்றுவிட்டனவா?
அவர் அழகாக சொன்னார்!
வேதங்கள் தோற்றுவிட்டன!
அதன் நீதி போதனைகளை-அதை
கெட்டியாகப் பற்றி நிற்போரே
பின்பற்றவில்லையே!-என
சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா?
வேதங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்-ஆனால்
வாழ்கிறோமா என்பதே கேள்விக்குறி!
ஏதோ வாழ்வோம் என
ஒரு வழியை தேர்ந்து கொண்ட
ஆன்மீகவாதிகளுக்கு
அதிகப் பொறுப்புகள் உண்டு!
அவர்கள் தேர்ந்து கொண்ட
அறவழித் தொகுப்பின்
சாட்சிகள் அவர்கள்!


ஒரு முஸ்லிம் குர்ஆனின் சாட்சி
ஓர் இந்து கீதையின் சாட்சி
ஒரு கிருத்தவர் பைபிளின் சாட்சி
ஆனால்
சாட்சிகளே பொய் சாட்சியாகலாமா?
குர்ஆன் கூறுகிறது
அனைவரும் ஆதம் பெற்ற மக்கள்!
ஆதமும் ஏவாளும்
இந்த அவைக்கு வருகை தந்தால்
அந்தப் பெற்றோரின் பார்வையில் நாம்
அன்பான பிள்ளைகளாகத்தாமே
தெரிவோம்!
கண்ணன் இங்கு காட்சி தந்தால்
இத்தனை பேரும்
என் உயிர் அல்லவா? என ரசிக்கமாட்டாரா?
இயேசு பெருமான் இங்கு வந்தால்
என் ஒளியிலிருந்து ஏற்றப்பட்ட
எத்தனை மெழுகுவர்த்திகள் என
வியக்கமாட்டாரா?


இந்தப் பார்வை
நம்மிடம் ஏன் இல்லை?
நாம் வேறு வேறாக எண்ணுகிறோம்!
நாம் வேறல்ல
விலக முடியாமல்
பின்னிப் பிணைந்து கிடக்கும்
வேர்கள் நாம்!
உங்கள் நுரையீரல் வரை
சென்று திரும்பிய சுவாசக் காற்றை
நான் சுவாசிக்கிறேன்.!
உங்கள் குருதியை உருவாக்கும்
உணவுப் பொருள்தான்
என் இரத்தத்தையும் உருவாக்குகிறது!
நீங்கள் வாங்கியச் சென்ற
அரிசி மூட்டையில்
பாதியை நான் வாங்குகிறேன்!
நீங்கள் வாங்கிய கடையில்
முதல் வடை நீங்கள் வாங்கினால்
கடைசி வடை எனக்குக் கிடைக்கிறது!
மின்வெட்டில்
இருவரும் இருட்டில் தவிக்கிறோம்!
உங்களைக் கடித்துக்
கொண்டிருக்கும் போதே
என்மீது ஒரு கண் வைத்திருக்கிறது
ஏக்கம் தீராத கொசு!
இந்த அரங்கம் நிரம்ப
அணுக்களின் தொகுப்பாகத்தான்
நாம் அமர்ந்திருக்கிறோம்!
ஒரே பிரபஞ்சம்
ஒரேபூமி-ஒரேசூரியன்-ஒரேசந்திரன்
ஒரேநாடு-ஒரேஊர்
ஒரே நகராட்சிக் குடிநீர்
ஒரே காலை-ஒரே மாலை
அப்படியானால்
வேறுவேறு என்பது வேடிக்கையல்லவா?
சோலை ஒன்று
மலர்கள் பல வண்ணங்களில்
பலவாசத்தில்!
மலர்களின் கூட்டணிதானேசோலை!
மனிதர்களின் கூட்டணிதானே சமூகம்!


அன்பர்களே!
அரசியல்வாதிகளே!
கொள்கையைப் புதைத்து
கூட்டணி சேரும்போது
ஆன்மீகவாதிகளாகிய நாம்
இணக்கம் காண முடியாதா?
அவர்கள் தங்கள்
உயிராக மதிக்கும்
கொள்கைகளையே
ஒத்திவைக்கும்போது
நாம் மயிராக மதிக்கவேண்டிய
தீவிர எண்ணங்களை
தீய்த்துவிட முடியாதா?
விட்டுக் கொடுத்தவர்
கெட்டுப் போனதில்லை!
எட்டி உதைத்தவர்
என்றும் நிலைத்ததில்லை!
நாம்
எட்டி உதைப்பவரின் காலடியிலும்
சகிப்புத்தன்மை-சமரசம் எனும்
சந்தன மலர்களைத் தூவுவோம்!
அது அவர்களின்
சிந்தனை உணர்வுகளைத் தூண்டலாம்!
இதுவே சமயங்களின் முடிவு
வேதங்களின் விடிவு!
காந்தியின் கனவு!
நபிகள் நாயகத்தின் நனவு
அனைவருக்கும் இணக்கம்!
அல்ல...அல்ல...
வணக்கம்.!

---திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடைப்பெற்ற மத நல்லிணக்க விழாவில் எஸ்.உசேன் முஹம்மது ஹக்கியுல்காதியுல் மன்பயீ வாசித்த கவிதை---

உடலுக்கு எடை உண்டு செயலுக்கு எடை உண்டா…?

எவருடைய (நன்மையின்) எடை கனமானதோ அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார். எவருடையின் நன்மையின் எடை இலேசாகி (ப் பாப எடை கனத்து) விட்டதோ அவன் தங்குமிடம் ஹாவியா தான். (30-101-6.7.8)

யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லா மனிதர்களிடமும் ஒரு தராசு இருக்கிறது. அந்த தராசால் மனிதர்கள் தினசரி எடைபோட்டுத் திரிகின்றனர். அந்தத் தராசு மனிதனின் உள்ளம் - அவனது மனம் ! காலையிலிருந்து இரவு வரை மனிதர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் சிந்தனையால் எடைப் போட்டு தீர்மானிக்கின்றனர்.

கடையில் வேலை செய்யும் ஊழியர் முதலாளியிடம் வந்து ஒருவாரம் லீவு கேட்கிறார். முதாலாளி அப்போது அந்த பணியாளர் இதுவரை நடந்த நடத்தையை எடைபோடுகிறார். ஒருவர் திடிரென நம்மிடம் வந்து ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார் உடனே மனதிற்குள் அவரது நாணயத்தை எடைபோட்டுப் பார்க்கிறோம்.

நம் நண்பரைப் பற்றி ஒருவர் நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறுகிறார் அப்போது சொல்பவரின் வார்த்தையையும் நண்பரின் பழக்க வழக்கங்களையும் எடைபோட்டுப் பார்த்து முடிவுக்கு வருகிறோம்.

இப்படி நம் மனத்தராசில் ஒவ்வொன்றையும் நிறுத்து எடைபார்த்து முடிவு செய்கிறோம்.

புவியிர்ப்பு உலகில் பொருள்களுக்குத்தான் எடையிருப்பதாகப் படித்திருக்கிறோம். ஆனால் செயல்களுக்கும் எடையிருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுpலரை வெயிட்பார்ட்டி என்போம் சிலரை இலேசாக க் கருதுவோம். இவையெல்லாம் மனத்தராசின் எடை முடிவுகள் தாம்.

ஆத்தியவாசியமான வேலை முடிந்ததும் அப்பாடா…என அமர்வோம். அதுவரை நாம் மனதிற்குள் சுமந்த பாரம் நீங்கியதற்கான ஆசுவாச வெளிப்பாடுதான் அது.

எனவே மனதிற்குள்ளே பெரும் சுமை – விஷயங்களின் வெயிட்டைப் பொறுத்தது.

சிலர் கண்களாலே எடைபோடுவதும் உண்டு. பார்வையாலே மனிதர்களை அளப்பவர்களும் உண்டு.

நீதி தேவதை கண்களில் கறுப்புத்துணி அணிந்து ஒரு கையில் தராசைப் பிடித்திருக்கும் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தம்அதிகம் எடைபோடுபவர்கள். அவர்களால் குற்றங்களையும் - நியாயங்களையும் எடைபோட்டுப் பார்க்க முடியும். சில தலைவர்களுக்கு மக்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பது அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகத்தை எடைபோட்டுப் பார்ப்பதால்.

மனிதர்களாகிய நாமே இப்படி எடை பார்க்கும் திறன் உடையவர்களாக இருக்கும் போது. மனிதர்களைப் படைத்த இறைவன் எடை பார்க்காமல் இருப்பானா?

இதைத்தான் நாம் மேலே படித்த திருமறை வசனத்தில் இறைவன் அழகாக விபரிக்கின்றான்.

இந்த உலகில் நாம் செய்த நன்மைகளையும் - தீமைகளையும் மறுமையில் இறைவன் தனது துல்லிதமான தராசில் எடைபோட்டு யாரது தட்டு கனமாக இருக்கிறதோ அவர்களுக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகிறான்.

நன்மை தீமைகளை எடைபோட முடியுமா ? என குதர்க்க வாதம் பேசுபவர்கள் தங்களை தாங்களே உற்றுப் பார்த்தால் …மனிதர்களின் செயல்களை எடைபோடும் மனத்தராசு தங்களிடம் இருப்பதை புரிந்துக் கொண்டால்…

இறைவனின் தராசில் எடை கனமாக இருக்கப்போகும் நற்செயல்களை அதிகம் செய்ய இன்றே முன்வருவார்கள்.

-ஆலிம் புலவர்