This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

புதிய கலீபா நியமனம்

இன்று 07/12/2010 இலங்கை வெலிகமையில் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையதுகலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள்
தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள் என்ற நற்செய்தியை அனைவருக்கும் எத்திவைப்பதில் அளப்பெரும் சந்தோசமடைகிறோம்.

கலீபா A.P.சிஹாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களுக்கு துபாய் சபையின் சார்பாக வாழ்த்துக்களை அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்.

தியாகத் திருநாள்

(ஹஜ்பெருநாள் நல் வாழ்த்துக்கள்..!)

நபி இபுராஹிமுக்கு
நழுவிப்போன நனவில்
அவரைத் தழுவிக்கொண்டது
நான்-என்ற எண்ணம்...

தவமிருந்து தரித்த தனையனை
தத்துவமறந்து தழுவியதால்
அல்லாஹ் ஆணையிட்டான்
அறுத்துவிடு...

அவரின் ஏகஉள்ளமையில்
ஏற்பட்ட தடுமாற்றம்
பெற்றபாசம்
படைத்தவனை
எண்ணத்திலிருந்து
பாலையாக்கியது...

நான்-என்ற சுயநலத்தை
அறுத்து
நாம் என்ற சுயத்தை
அருந்த வேண்டிய ஆணை...

இருப்பதும் இல்லாமையும்
இறையாகும் போது
அறுப்பதும் அறுக்கப்படுவதும்
பேதமாவதில்லை...

அறுப்பது நானாக இருந்தாலும்
அறுக்கப்படுவதில்
நான் இருக்கவேண்டும்
அது தான் குர்பான்...

இது தீர்க்கதரிசிக்கு
இறைவன் தந்த
தீர்ப்புமட்டுமல்ல
தீனோர்க்கு இட்டகட்டளை...!

- கிளியனூர் இஸ்மத்

இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

தியாகத் திருநாளின் நல் வாழ்த்துக்கள்...

இன்று காலை ஏழு மணிக்கு ஈத் பெருநாளின் தொழுகையை முடித்துக் கொண்டு காலை 8.30 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி துவா செய்தார்கள்.
பெருநாளின் வாழ்த்துக்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.