This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label ஜமாலியாத் தோட்டம். Show all posts
Showing posts with label ஜமாலியாத் தோட்டம். Show all posts

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...3

முன்னர் அனைத்துப் பொருளுமாய் இருந்தோம். அதிலிருந்தே நாமும் உருவம் பெற்றோம். இதனாலே வேறுபட்டோம். ஆயினும் நாமும் அனைத்துப் பொருளும் அதனிலிருந்தே வெளியானோம்…

நம் பாட்டனார் ரசூல் (ஸல்அலை) அவர்களின் காலத்திலிருந்து எதிர்ப்புகள் தௌஹீதிற்கு வந்து கொண்டிருக்கின்றன. நாம் வாரிசாக இருப்பதால் நம் காலத்திலும் இது வரவேண்டியது அவசியமாகிவிட்டது. ரசூல் (ஸல்அலை) காலத்திலிருந்த அபூஜஹ்ல் அபூலஹப் ஆகியோரின் சந்ததிகளும் நம் காலத்தில் உள்ளார்கள். ஆதலால் இது விஷயங்களுக்கு நாம் கவலையோ துன்பமோ படவில்லை…

நாம் என்றும் பொய் கூறவில்லை. தௌஹீத் என்று மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்குடன் பொய்கூறவில்லை. பரிசுத்தமாக உண்மைத் தௌஹீதையே கூறுகிறோம்…

ஊருக்குள் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொள்வது நம் நோக்கமல்ல. ஊரில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். உண்மையான ஷரீஅத்தையும் தௌஹீதையும் பின்பற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.

ரசூல் (ஸல்அலை) அவர்களுக்கு அதிக எதிரிகள் இருந்தார்கள். அதே போன்று மற்றும் நபிமார்கள், வலீமார்களுக்கும் கடும் எதிரிகளுமிருந்தார்கள். அது ஹக்கினால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும்பேறாகும். அவ்வாறே நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எதிரிகள் இருப்பார்கள். இதனால் நாம் சோதிக்கப்படுவதில்லை. நம் எதிரிகள்தாம் சோதிக்கப்படுகிறார்கள். சோதிக்கப்பட்டு அவர்கள் திருந்தி விடுவார்களாயின் நன்மை பயக்கும். இல்லையாயின் அவர்கள் நிலைமை கவலைக்கிடமானதாகும். எதிரிகள் எம்மை எதிர்ப்பதைவிட அவர்களுடன் ஹக்கு எதிர்க்கப்போவது மிகக் கடுமையானது. மிகப் பயங்கரமான முன்னர் நடந்தவைகள் அந்த எதிரிகளுக்கு உதாரணமாகக் கடவது.

நம்மைப்பற்றி மேலும் துர்வார்த்தைகள் உபயோகித்து தௌஹீதை ஏளனம் செய்வாராயின் நிச்சயம் ஸ_உல்ஹாத்திமாவை அடைவார்கள்…!

-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மௌலானா

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...௨


ரசூல் (ஸல்அலை)அவர்களை நமது தாய் தந்தையர் மற்றும் உயிரைவிட அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்பால் உள்ள மிகுந்த அன்பால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்போம். அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தால் நமது வாழ்க்கை சீரியதாக இருக்கும். அதற்கு அன்புதான் அடிப்படை. ரசூல்(ஸல்அலை) அவர்கள் கூறியது அனைத்தும் அறிவுதான்...!

எம்பெருமானார்(ஸல்அலை) அவர்களை நேசிக்காமல் இறைவனுடைய நெருக்கத்தையோ அன்பையோ நம்மால் எந்த வகையிலும் அடையமுடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிக்கெட்ட மூடனாவான்...!

நபிகள் நாயகம் (ஸல்அலை) அவர்களை அவர்கள் ஹக்கின் பரிபூரணத்தோன்றல் எனும் உட்கருத்துக்காகவும் அவர்களின்றேல் பரிபூரண பரிசுத்த சாந்தமான நல்வாழ்வு மானிடர்கள் எய்தி இருக்கமாட்டார்கள் என்பதற்காகவும் அவர்களின் அருங்குணம் வீரம் செயலற்றும் தன்மை போன்ற மற்ற எண்ணற்ற நற்காரியங்களுக்காகவும் எம் உள் வெளி இரகசியங்கள் கொண்ட பாட்டனார் என்பதற்காகவும் அவர்களை றான் உள்ளார நேசிக்கின்றேன்...!

ஒர் ஊரில் ஒரேயொரு முரீது இருந்தாலும் அவர் ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒரு நாளாவது புனித மவ்லிது ஷரீபை ஒதி கந்தூரி கொடுத்து அந்த மாதத்தைச் சிறப்பிக்கவேண்டும்.

கந்தூரி மீலாது விழாக்களைச் சிறப்பாக செய்யுங்கள். நம் ஊரில் மீலாது கந்தூரி செய்வதால் நமக்கு மட்டுமல்ல -நம் எல்லோருக்கும் நன்மையுண்டு பெண்களும் வீட்டில் மவ்லூது ஷரீப் ஒத வேண்டும்.

ஹஸன்-ஹ+ஸைன் (ரலி) மவ்லிதையும் ஒதுங்கள். பத்ரு ஸஹாபாக்கள் மவ்லிதையும் ஒதுங்கள்...!

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...1


பிரபஞ்சத்தின் எல்லா வகை இயக்கங்களும் இந்த ஸலவாத்தெனும் துஆவால் நிரைபடுத்தப்படுகின்றன. இதனால்தான் அல்லாஹ்வும் வானவர்களும் ஸலவாத்துச் சொல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு வேறு தாற்பரியங்களும் நிறைய உள்ளன. இதில் ரசூல் நாயகம்(ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டதும் இஃது அவர்களுக்கு மட்டுமின்றி பரிபூரண பிரபஞ்சத்துக்கும் கேட்கும் பிரார்த்தனையாகும்.
************************************
இஸ்லாத்தில் கொஞ்சமும் ஷிர்கு (இணை வைத்தல்)இல்லாத முழுமையான தத்துவமுள்ளது. இதையறியாத மக்கள்தாம் இஸ்லாத்தில் தத்துவஞானமில்லை என்கின்றனர். இஸ்லாத்தில் உள்ள தத்துவஞானம் தான் மிகச் சிறப்புடையதாகும்.
***************************************
சிலர் இஸ்லாத்தில் தத்துவஞானம் இல்லை எனக்கூறி இஸ்லாத்தையே இழிவுபடுத்துகின்றனர். இஸ்லாத்தில் வணக்க வழிபாடுமுறைகள் மட்டுமே கூறப்படுவதாயும் வேறு மதங்களில் தத்துவங்கள் உள்ளதாயும் முஸ்லிம்களிற் சிலரே கூறத் தொடங்கியுள்ளனர். இஃது இஸ்லாத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
*********************************
அசையதா பக்கி உள்ளவருக்கு எல்லாம் கைகூடும்.
************************************
பில்லி சூனியத்தை நம்பி ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார்கள். அதில் ஒரு புண்ணியமும் இல்லை. நோய் வந்தால் டாக்டரிடம் செல்லவேண்டும். அதுவே நல்லது. சூனியத்திற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நமது முரீதுகளுக்கும் அப்படித்தான்.
*************************************
நாங்கள் ஷரீஅத் தரீகத் ஹக்கீகத் மஃரிபத் என்ற நான்கு படிகளிலுமே ஓரே நேரத்தில் இருக்கிறோம் என்று கூறுங்கள்.
**************************************
டாக்டர்களால் செய்ய முடியாத மருத்துவத்தை நபிகள் நாயகம்(ஸல் அலை)அவர்கள் கற்றுக் கொடுத்த தொழுகை செய்துவிடும். தொழுகையானது கண் காது மூளை உடல் ஆத்மா என அனைத்திற்கும் மருந்தாக விளங்குகிறது. எம்காலில் இருந்த வலியினைக் குணமாக்கியது.
****************************************
தன்னையோ தன் பெயரையோ எமக்குள்ள எதுகைகளையோ நினையாது இஸ்தம்பமான எம்மை மறந்த மறதி நிலையில் நாமாகிவிட வேண்டும். நிஷ்டையும் இதுவே. முஷாஹதாவும் இதுவே. அப்போதே தன்னை அனல் ஹக் என்றும் அனள்ளாஹ் என்றும் அறிந்தவன் கூறுவான்...

-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவுன் மௌலானா