This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label வரவேற்பு. Show all posts
Showing posts with label வரவேற்பு. Show all posts

அமீரகத்தின் அவ்காப் அதிகாரி செய்குநாயகத்துடன் சந்திப்பு

அமீரகத்தின் அவ்காபின் அரசு உயர் அதிகாரியான டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்கள் சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்களை சந்தித்து மனம் மகிழ்ந்தார்.



ஒவ்வொரு ஆண்டும் செய்குநாயகம் விஜயத்தின் போது அவர்களை சந்தித்து தனது மரியாதையையும் அவர்களிடம் துவாவையும் பெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள.





இராத்திபத்துல் ஹக்கியத்தில் காதரிய்யா(இராத்தீபு) சிடியை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கி சங்கைமிகு செய்குநாயகம் வெளியிட்டார்கள் மற்றும் மௌலானா மார்களுக்கும் வழங்கினார்கள்.





சங்கைமிகு இமாம் செய்குநாயகம் அவர்கள் மொழிப்பெர்த்த பர்ஸன்ஜிய் மவ்லித் நூலை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு வழங்கினார்கள்





தனது சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகமாக முரிதுக்கு மத்தியில் தானும் செய்குநாயகத்தின் முரிது என்ற எண்ணத்துடன் சில நிமிடங்கள் அரபும், ஆங்கிலமும் கலந்து உரையாற்றினார்கள்.




சங்கைமிகு ஷெய்குனாவுடன் ஈராக்கியர் சந்திப்பு

அமீரகத்தில் பிரபளமான அமரியாவில் அல்தாஹிர் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையை நிறைவேற்றி விட்டு முரிதீன்களுடன் சங்கைமிகு இமாம் ஷெய்குனா அவர்கள் ஷார்ஜாவிற்கு புறப்பட்டார்கள்.







ஷார்ஜாவில் பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் இல்லத்திற்கு விஜயம் செய்த சங்கைமிகு இமாம் ஷெய்குனாவை, ஈராக் நாட்டைச் சார்ந்த மதிப்பிற்குரிய முஹம்மது அவர்கள் ஆர்வத்துடன் வரவேற்று சந்தித்தார்,
தானும், தனது குடும்பத்தார்களும் காதிரிய்யா தரீக்காவை சார்ந்தர்கள் என்றும், மஹ்பூபே சுபுஹானி முஹைய்யதீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்களின் மீது அதிகமான அன்பை வைத்திருக்கிறோம் என்றும் தாங்கள் கட்டாயம் ஈராக் வரவேண்டும்,அஹ்லபைத்தாகிய தாங்கள் எங்கள் நாட்டிற்காக துவா செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
சங்கைமிகு ஷெய்குனா அவர்கள் துவா செய்தார்கள்.


சங்கைமிகு ஷெய்குனா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித திரு குடும்பத்தினருமாகிய அஹ்லேபைத் சங்கைமிகு இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் உசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்


20/04/2011 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஜ்லிஸிற்கு வருகைப்புரிந்தார்கள்.


அவர்கள் மஜ்லிஸிற்கு வந்தபோது அனைத்து முரிதீன்களும் எழுந்து நின்று யாநபி பைத்(பாடல்)பாடிய வண்ணம் உற்சாகமாக வரவேற்றனர்.







சங்கைமிகு ஷைகுனா துபாய் வருகை


ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும், கண்மணிநாயகம் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் திரு குடும்பத்தினருமான சங்கைமிக்க இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் வளைகுடாவிற்கு ஆன்மீக சுற்றுப் பயணமாக ஏப்ரல் 14ம் தேதி குவைத்திற்கு சென்றார்கள்.

அவர்களுடன் இந்தியாவிலிருந்து ஆலிம் பெருந்தகை புலவர் கலீபா S.ஹுசேன் முஹம்மது மன்பஈ ஹக்கியுல்காதிரி அவர்களும், ஷாஜகான் மகனார் அலிஅக்பர் அவர்களும், துபாயிலிருந்து சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A அவர்களும் உடன் சென்றிருந்தனர்.

குவைத் சுற்றுப்பயணத்தை நிறைவுச் செய்துவிட்டு, ஏப்ரல் 19ம் தேதி இரவு 10.00 மணிக்கு, 14ஆம் ஆண்டு, விஜயமாக துபாய் வருகைப் புரிந்துள்ளார்கள்.

சங்கைமிக்க ஷைக்குனாவை வரவேற்கும் முகமாக துபாய் முரீதீன்கள் மிக ஆர்வத்துடன் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குழுமியிருந்து அவர்களை சங்கையுடன் வரவேற்றனர்.


சங்கைமிகு ஷெய்குனாவை வரவேற்க துபாய் விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆன்மீக சகோதரர்கள்







விமான நிலையத்திலிருந்து வெளியில் வருகிறார்கள்

















நன்றி
புகைப்படங்கள் - அமீர்அலி,RAJA MOHAMED

ரோல்பேனர் - அபுல்பஸர்

இஸ்லாமிய இலக்கிய தமிழறிஞர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 27/.2/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித மௌலூது ஷரீப் நிகழ்ச்சிக்கு பின்னர்

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் இந்திய பொதுச் செயலாளர் சே.மு.முகமதலி, கவிச்சித்தர் மு.மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆகிய இஸ்லாமிய இலக்கிய தமிழறிஞர்களுக்கு சபையின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A தலைமை தாங்கினார்.

அதிரை அப்துல்ரஹ்மான் கிராஅத் ஓதி துவங்கினார்
பாடகர் முஹம்மது தாவூது நபிப் புகழ்கீதம் இசைத்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடையும் நினைவு பரிசும் மௌலானாமார்கள் வழங்கி கொளரவித்தார்கள்.
பொதுச்செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தார்களும், லால்பேட்டை ஜமாஅத்தார்களும் மற்றும் ஈமான் அமைப்பின் ஆடிட்டர் எஸ்.எம்.பாருக், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீகரகத்தின் விழாகுழு செயலாளர் ராஸாகான் மற்றும் ஊடகத்துறையாளர் முதுவை ஹிதாயத் இன்னும் பல அமைப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவை கிளியனூர் இஸ்மத், அதிரை சர்புதீன், மன்னார்குடி ஷேக்தாவூது, அப்துல்மாலிக், அமீர்அலி, அபுல்பசர் ஏற்பாடு செய்தார்கள்.

நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு நிறைவடைந்தது.