This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label அருள்மொழி. Show all posts
Showing posts with label அருள்மொழி. Show all posts

"நுஜூல்" - "உரூஜ்"

ஏழு வானங்கள் என்பது தவ்ஹீதின் ஏழு படிகளாகும். மனிதன் தான் "அர்வாஹ்" உடைய ஆலத்தில் சஞ்சரிப்பதற்கு முன்னால் அவன் ஹக்குடைய நிலையில் இருந்தான். அப்போது அவன் உயர் அந்தஸ்தில் இருந்தான்.

பின்னால் அவன் உலகத்தில் பிறந்து சிறிது சிறிதாய் உலகத்தை அறியும்போது அவன் முதலிருந்த நிலையை மறந்து விடுகிறான்.
அப்போது அவன் அப்படியே கீழ்ப்படிக்கு இறங்கிவிடுகிறான். முதலில்
அவன் இருந்தது "உரூஜில்" ஆகும். பின்னர் அவன் "நுஜுலுக்கு"
வந்து விட்டான்.

அவன் இப்படியே உலக ஆசாபாசங்களில் கட்டுண்டு அதிலேயே இருந்து
விடுகிறான். ஹக்கு யாருக்கு நேர்வழி காட்டுகிறதோ அவர் அவனின்
அருளைக்கொண்டு படிப்படியாகவும் அமைதியாகவும் பல படிகளை
ஒரே நேரத்தில் கடந்து விரைவாகவும் "உரூஜ்" சென்று விடுகிறார்கள்.

இப்படி உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கு "நுஜூல்" "உரூஜ்" என்னும் வித்தியாசம் அற்றுவிடும். அவர்களுக்கு நுஜூல் , உரூஜ் என்பது மிகவும் இலகுவாக இருக்கும்.

அவர்கள் கீழ்ப்படிக்கு வந்து பார்க்கும்போதும் அவர்கள் உயர்படியில்
இருப்பதையே நினைப்பார்கள். உயர்படியை மறந்துவிடவும் மாட்டார்கள்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

நன்றி சிராஜிதீன் துபை

கவலை நீங்க ஒருவழி!

எந்த நேரத்திலும் மனம் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும். சந்தோசமாக இருந்தால்தான்
அவனுடைய வாழ்வும் சந்தோசமாகும். ஒரு சிறிய விஷயத்திற்குக் கடைசிவரை கவலைப்பட்டுக்
கொண்டிருந்தால், அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டுக் கஷ்டமே அவனை வந்தடைந்து
கொண்டிருக்கும். ஆதலால், எந்தக் கஷ்ட நிலையிலும் சந்தோஷப்பட்டால் அவனுக்கு அந்தக்
கஷ்டம் நீங்கிச் சந்தோசம் நிலை கொள்ளும். இது இயற்கை. கவலை வருமாயின் அவற்றை
மறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
நன்றி - சிராஜிதீன் மதுக்கூர்

பெரும் தியாகம்


இயற்கைப் பொருட்களைக் கவனியுங்கள். மழைவர நனைகிறோம், வெயில்வரக் காய்கிறோம்.`
நீரின்றி தாவரங்கள் வாடுகின்றன. காற்று வீசப் பொருட்கள் அசைகின்றன.காற்றின்றேல்
அசைவின்றி நிற்கின்றன.

இவைகள் நடப்பதுபோல் நடக்கட்டும் என்று இருக்கின்றன. இது சூபியத் (மெய்ஞானம்) ஆகும்.
ஆயினும் இறை ஊகிக்க அறிவையும் செயற்பட அசைவையும் மனிதனுக்கு கொடையாக
கொடுத்துள்ளது. புத்தியுடன் வாழ்வோர் போற்றப்படுவர்.

மனிதனுக்கு ஒரு குணம் உண்டு.அது சமயோசிதப்படி நடப்பதாகும். கண்டவையெல்லாம் கவலை
எனவும் தொட்டவையெல்லாம் கெட்டவை எனவும் பார்த்தவை எல்லாம் பாராமுகம் எனவும்
கருதி மனதைப் புண்படுத்துவதும்தான் அதனால் கெடுவதும் பெரும் தப்பாகும்.

இவைகள் நீங்கி வாழவே ஹக்கு தவ்ஹீதை (ஏகத்துவ ஞானத்தை) நமக்குத் தந்தது.

தௌஹீதை (ஏகத்துவ ஞானத்தை) ஒருவரால் மற்றவருக்கு எந்த அளவுக்கு பரப்ப முடியுமோ
அந்த அளவில் பரப்பாலும் அதற்காக முயற்சித்தலும்தான் நாம் ஹக்கு(ஏகன்)க்குச் செய்யும் பெரும் தியாகம்.

நல்லமுறையில் தௌஹீத் (ஏகத்துவ ஞான) விளக்கங்களை உரியவர்களுக்குக் கூறுங்கள்.

---- சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

Thanks - sirajudeen

பாபம் தவிர்

சிலர் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாமனார், மாமியார், கணவர் செய்யக்கூடிய பெண் கொடுமை மிகப்பெரிய பாபமாகும். 
ஒருவன் ஓர் அநியாயத்தை செய்துவிட்டால் அவன் அந்த அநியாயத்தை 
அடைந்தே தீரவேண்டும்.

ஒருவருக்கு துன்பம் தரக்கூடிய பெரும்பாபமான காரியத்தை யாரும் கண்டிப்பாகச் செய்துவிடாதீர்கள்.
பிறருடைய மனதை புண்படுத்தக்கூடிய பெரும்பாபத்தைப்போல வேறு பாபம் உலகில் இலலை.

ஏழை விடும் கண்ணீர் கூறிய வாளைப்போல என்பதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள் கூறியதை மனதில் கொண்டு ஏழைகளுக்கு அநியாயம் செய்து விடாதீர்கள். இதுதான் ஷிர்க்கோடு 
சேர்ந்த மிகக் கொடிய பாபம். மனம் நேர்மையிருந்தால்தான் ஒருவன் ஷிர்க்கை விட்டும் நீங்க முடியும். 

                                                              ---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen

சூன்யம்-ஒரு பொய்யான விஷயம்!!!


சூன்யத்தைப் பற்றி நாம் பலமுறை இது பொய்யான விஷயம் எனக்கூறி வந்துள்ளோம்.
சூனியம் செய்தவர்களோடு பழகிப் பார்த்த பிறகும் அது பொய்யான விஷயம் என்பதனை 
நாமும் அறிந்து நமது முரீதுகளுக்கும் போதித்தோம்.

சூன்யம் என ஒன்று இலலை என்பதனை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது.
அறிவுள்ள-மூளையுள்ள எந்தவொரு மனிதனும் சூன்யத்தை நம்பமாட்டான்.

ஒரு முட்டையில் எழுதி நிலத்தில் புதைத்து வைப்பதலோ, ஒரு தகட்டில் எழுதி பூமியில்
புதைத்து வைப்பதாலோ மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விடுமா? என்னே அறியாமை?

ரசூலுல்லாஹ் ஷல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சூன்யம் செய்ததாக 
தப்ஸீர் ஜலாலைனில் கூறப்படுகிறது அவ்வாறு சூன்யம் செய்யப்பட்டபோதுதான் 
"குல் அஊது பிறப்பில் பலக்" சூறாவும் "குல் அஊது பிறப்பின்னாஸ்" சூறாவும் இறங்கியதாக 
அந்த தப்ஸீரில் கூறப்படுகிறது.

திருமறையின் பிறிதொரு வசனத்தில் காபிர்கள் "நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட மனிதரையா
பின்பற்றுகிறீர்கள்? எனக்கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க... இந்த வசனத்தின்படி 
ரசூலுல்லாஹ்வை சூனியம் செய்யப்பட்டவர்களல்ல என ஏற்றுக்கொள்பவர்கள்
"குல் அஊது பிறப்பில் பலக்" சூறாவிற்கு விளக்கம் சொல்லும்போது 
ரசூலுல்லாஹ் ஷல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சூன்யம் செய்யப்பட்டதாகக் 
கூறுவது அறிவிற்கு பொருத்தமானதாக இல்லையே?
பெண்களுக்குத் தான் இந்த "ஸிஹ்ரு" விஷயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது 
ஸிஹ்ரு பொய்யான விஷயம் என்பதனையறியாது பெண்கள் தாங்களும் குழம்பி பிறரையும் 
குழப்பி விடுகிறார்கள்.

அல்லாஹ் நாடக் கூடியவைதான் நடக்குமே தவிர தகட்டில் ஒன்றை, முட்டையில் ஒன்றை எழுதி 
புதைப்பதாலோ எந்தவொன்றும் நடக்காது.

அல்லாஹ் நாடியதே நடக்கும் என்பதை விளங்குவதற்க்க்காகத்தான் முரீத்-பைஅத் பெறுகிறோம் 
என்பதை அறிய வேண்டும். அல்லாஹ் நாடியது தான் நடக்கும். அதுதான் இயற்கை.

                                                                     -சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் 

Thanks - Sirajudeen Madukkur

ஹக்கை அறியாமல் எங்ஙனம் வணங்க இயலும்?

"அல்லாஹ்" என்னும் ஒருவனே ஏகன், அனைத்தும் அவனே என்பதுதான் வஹ்தத்துல் வுஜூத் ஆகும்.
அடிப்படைத் தத்துவார்த்தமான அதனை எங்ஙனம் அறியாமல் இருப்பது? எப்படி உணராமல் இருக்கின்றனர்?
என்பது வியப்பிற்குரியதாக இருக்கின்றது.


ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை என உருவத்தில் படைத்தேன் எனது ரூஹை அவரிலே ஊதினேன்
என ஏக இறை கூறுவதே தவ்ஹீதின் கருத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.


இதிலிருந்து (த்ஜல்லியாக) வெளியாகியிருப்பது ஹக்கே என்பதும் எல்லாமும் அதிலிருந்தே வெளியாயின
என்பதும் தெளிவாகின்றன. இதுவேதான் தவ்ஹீதும், ஷரீஅத்தும், இதனை எங்ஙனம் பிரிக்க இயலும்?

அல்லாஹ்வை ஆராயக்கூடாது, சிந்திக்கக்கூடாது எனச் சிலர் அறியாமையினால் கூறித் திரிகின்றனர்.
ஹக்கை அறியாமல் அவனை நாம் எங்ஙனம் வணங்க இயலும்? எனவே, ஹக்கை அறிவது மிகவும்
அவசியமாகும்.


------சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.
Thanks - Madukkur Sirajudeen

இறையை மறந்திடாதே!!!

கௌதுல் அஉளமே! பாபிகளுக்கு வரிசை கொண்டும் சங்கை கொண்டும் நன்மாராயம் கூறுவீராக.
அகப்பெருமை (ஆரம்பத்தில் ) உடையோருக்கு பழிப்பைக் கொண்டும், வேதனையைக் கொண்டும்
துன்மாராயம் கூறுவீராக.




விளக்கம் : வழிபாடுடையவர்கள் சுவர்க்கம் அல்லது சௌகரியம் அல்லது செழுமை அல்லது
சுகபோகங்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். பாபத்தையுடையவர்கள் இறைவனுடைய
கிருபை அல்லது தயை அல்லது கருணையை எண்ணிக் கொண்டிருப்பார்கள். நன்மை செய்து
கொண்டிருப்பர்வகள் நன்மையில் மருண்டு இறைவனல்லாதவற்றை விரும்பிக்கொண்டிருப்பார்கள்.
பபிகளோ தாம் செய்த பாபங்களுக்காக இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
அதிக நன்னடத்தைகளும் சுதந்திரமும் சுபிட்சமும் இறைவனை மறக்கச்செய்யும்
திரைகளாகிவிடுகின்றன. தாம் செய்த குற்றத்திற்கு அழுங்கிப் பயந்திருப்பவர்களுக்குத் திரை
அறுந்து இறையை மறந்திடாதிருக்க அது உதவுகிறது.


கௌதுல் அஉளம் அவர்களுடைய ரிஸாலதுல் கௌதிய்யா எனும் நூலின் மொழிபெயர்ப்பிலிருந்து......


மொழி பெயர்த்தவர்கள் சங்கைமிகு குத்புல் அக்தாப் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மௌலானா அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் (ரலி) அவர்கள்.


விளக்கம் சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸூல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹசனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா அவர்கள்.

Thanks- Sirajudeen Madukkur

தனிச்சிறப்பு மிக்க பெருமானார் ( ஸல் ) அவர்கள்.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தனிச்சிறப்பு " உபூதிய்யத்"
என்னும் அடிமைத்தனத்தை இரண்டு நிலைகளிலும் ஒழித்ததாகும்.

அவற்றில் ஒன்று மக்களில் அடிமையாய் கருதப்பட்டவர்களுக்கு சமுதாயத்தில் சமஉரிமை அளித்து
மனிதரில் யாரும் யாருக்கும் அடிமை இலலை என்பதனை உணர்த்தியதாகும்.

இரண்டாவது, ஆபிதும் (வணங்குபவனும்) மஉபூதும் (வணங்கப்படுபவனும் ) எதார்த்தத்தில் ஒன்றேதான்
வேறானதல்ல அனைத்தையும் ஏகமாகக் காணும்போது அங்கே எஜமான், அடிமை என்னும் பிரிவில்லை.

எனவே "எஜமான்" என ஒருவன் உள்ளான் "அடிமை" என நான் உள்ளேன் எனும் எண்ணத்திலுள்ள அடிமைத்தனத்தையும்
எம்பட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அகற்றினார்கள்.

எனவேதான் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அனைத்திலும் மேலானவர்கள் எனக்கூறுகிறோம்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பேரன்பு கொள்ளாதவன் பேரின்பம் காணமாட்டான்.


அருளியவர்கள் : - சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்கள்.

தூய சிந்தனை, மாய சிந்தனை

மனிதா!...

உன் மானிட சிந்தனையுடன் உன் தூய சிந்தனையை சிறிது நேரமாவது வைத்துக்கொள்.
அது உன் தீய சிந்தனையிலிருந்து உன்னை திசை திருப்பி நேர் வழிக்கு கொண்டுவந்துவிடும்.

தூய சிந்தனையென்பது எது? அதில் கபடம் இல்லை, குபாடம் இல்லை, பாபம் இல்லை,
களவு,சூது இலலை. அது ஒன்றையே சிந்திப்பதாகும். மாய சிந்தனை மனிதனை ஆதி நிலையை அறியவிடாது மயக்கிவிடுகிறது .

இந்த மாயச் சிந்தனையால் எல்லாவற்றையும் அறிந்து பேரறிஞன் எனும் பெயர் நீ பெற்றாலும்
நீ ஒரு பதர் என்பதை உணர்ந்துகொள்.

-சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்கள் அருளிய சிந்தனைத் துளி............
-சிராஜ்தீன் மதுக்கூர்