This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

அவ்ன் நாயகர் 74

1. அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருமரபாகிய அஹ்லபைத்தில் 34ஆவது தலைமுறைப் பேரராக உதித்தது.

2. முஹிய்யத்தீன் ஆண்டகை(ரலி) உதித்த பகுதாதில் அவ்ன்நாயகரின் பாட்டனார் ஜமாலிய்யா மௌலானா (ரலி) பிறந்து - வளர்ந்து - வாழ்ந்து - படைத்தளகர்த்தராக பணியாற்றியது.

3. தன்னிகரற்ற மாமேதையாக அறபு மொழிக் களஞ்சியமாக குத்புல்பரீதாக விளங்கிய மாமேதை யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் மகவாகப் பிறந்தது.

4. புகாரி ஷரீபுக்கு அறபு மொழியில் விரிவுரை எழுதிய பல்கலைக் கழகமான தந்தையிடமே அறபுக் கல்வியை - ஆலிமுக்குரிய கலைகளைப் படித்துக் கொண்டது.

5. தந்தையார் தோற்றுவித்த "தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா"வை தொடர்ந்து வழி நடத்தும் காமில் ஷைகாக உயர்ந்தது.

6. தந்தையாரைப் போலவே அறபு மொழியில் பாக்களும் இயற்றுவது.

7. முன்னோர்களிலிருந்து இவர்கள்வரை "விலாயத்" எனும் வலித்துவம் அறுபடாமல் தொடர்ந்து வருவது.

8. தமிழ் ஆங்கிலம் பயின்று இலங்கையில் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து கல்வி அதிகாரியாக உயர்ந்தது.

9. தாங்களே தமிழ் மொழியின் உயர் கல்வியைப் படித்து தமிழ் வித்துவான்களும் திகைக்குமளவு தமிழாற்றலை வளர்த்துக் கொண்டது. தமிழில் அத்துணை பா வகையிலும் இலக்கணப் பிழையின்றி மரபுக் கவிதைகள் யாப்பது.

10. முந்தி வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் போல சித்திரக்கவி வரையும் ஆற்றல் பெற்றிருப்பது.

11. அழகான ஓவியங்கள் வரையும் தனித்திறன் பெற்றிருப்பது.

12. திரு.வி.க. போன்ற மாபெரும் தமிழ் அறிஞர்களைப் போல தீந்தமிழில் உரைநடைகள் எழுதுவது.

13. அறபு மொழியிலிருந்து அழகு தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் பெற்றிருப்பது.

14. ஈழவள நாட்டில் பயிர் பெருக்க வாரீர் - இறையருட்பா - மகானந்தாலங்காரமாலை - நாயகர் பன்னிரு பாடல் - அற்புத அகில நாதர் - இறைவலிய் சய்யிது முஹம்மது மௌலானா போன்ற கவிதை நூற்களும் பேரின்பப்பாதை - யாசீன் (ரலி) - தாகிபிரபம் - ஹகாயிகுஸ்ஸபா போன்ற உரைநடை நூற்களும் பர்ஜன்ஜீ மௌலிது - ரிஸாலா கௌதிய்யா - பத்ருமவ்லிது - துற்பத்துல் முர்ஸலா ஆகிய மொழிபெயர்ப்பு நூற்களும் உமர் (ரலி) புராணம் எனும் காவியமும் யாப்பிலக்கண நூல் ஒன்றும் என பதினாறு நூற்கள் எழுதியது இன்னும் பல நூற்கள் எழுதிக் கொண்டிருப்பது. தந்தை யாசீன்நாயகம் அவர்களின் அறபு - அறபுத் தமிழ் அகராதியை பல புதிய சொற்களுடன் பதிப்பிப்பது.

15. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான முரீதுகளின் குருவாக விளங்குவது.

16. முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) - அப்துல் கறீம் ஜீலி (ரலி) போன்ற மாபெரும் ஞானிகள் நிலை நின்று உலகுக்கு எடுத்தோதிய வஹ்தத்துல் வுஜூது கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு உலகுக்கு வெளியாக்குவது.

17. ஷரீஅத்தை முழுமையாகக் கடைப்பிடித்து நடப்பது.

18. சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கு உறுதுணையாக இருப்பது.

19. முன்னோர்கள் ஸாலிஹீன்கள் வழி நின்று மௌலிது - பாத்திஹா - ஜியாரத் போன்ற செயல்களை எடுத்து நடத்தி - பிறரையும் நடத்தத் தூண்டுவது.

20. வஹ்ஹாபிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வது.

21. எத்துணை எதிர்ப்புகள் வந்த போதும் கொண்ட கொள்கை உறுதிமாறாமல் நிலைநின்று எதிரிகளை வெல்வது.

22. ஞானம் என்ற பெயரில் அறிவுக்கொவ்வாத மூடக் கொள்கையைக் கொண்டிருப்பதை தெளிந்த அறிவால் நீக்குவது.

23. எண்ணற்ற கராமத்துகளை நிகழ்த்தியது- நிகழ்த்தி வருவது. முன்னால் பார்த்து அறியாதவர்களின் கனவில் காட்சி தந்து அவர்களுக்கு நேர்வழி காட்டியது.

24. மார்க்க அறிஞர்கள் - உலகியல் அறிவு பெற்ற படித்தவர்கள் - பட்டதாரிகள் டாக்டர்கள் என பலதரப்பட்டவர்களை முரீதாக பெற்றிருப்பது.

25. ஏழை பணக்காரர் படித்தவர் பாமரர் அனைவரையும் சமமாக நடத்துவது.

26. நீண்ட நேரம் உரையாற்றாமல் சுருக்கமாக - எளியமுறையில் ஞானத்தை விளங்க வைப்பது.

27. குர்ஆன் - ஹதீஸில் உள்ளவற்றை மறுக்காமல் அப்படியே நம்பி அவற்றின் உள்ளார்த்தமான தத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது.

28. சூனியம் மலக்கு ஜின் நப்ஸ் ஆலமுல் பர்ஜக் - ரூஹ_ - மலகூத் - ஜபரூத் போன்றவைகளின் உண்மைத் தத்துவத்தை உரைத்தது.

29. குர்ஆன் ஷரீபின் அதிமுக்கியத்துவத்தை விளங்க வைத்தது.

30. ரசூல்(ஸல்) அவர்களின் அந்தரங்கத்தை விளங்க வைத்தது.

31. அவர்களின் நேசத்தை ஆழமாக விளங்கவைப்பது.

32. அல்லாஹ்வை இன்னதென்று விளக்கி குழப்பமில்லாமல் விளங்கவைப்பது.

33. நம் மனதில் எழும் சந்தேக வினாக்களுக்கு நாம் கேட்காமலே விடைபகர்வது.

34. நாம் வைக்கும் கோரிக்கைகளை அன்போடு கேட்டு ஏற்று அல்லாஹ்வின் அருள் உதவியால் நிறைவேற்றித் தருவது.

35. இறைஞானத்தை மத பேதமின்றி ஒன்றுபட்டு சிந்திக்க ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையைத் தோற்றுவித்து முப்பத்து ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வருவது.

36. ஆன்மீகத்திற்கென மறைஞானப் பேழை மாத இதழைத் தொடங்கச் செய்து 25 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரச் செய்வது.

37. மார்க்க கல்வி - உலகக் கல்வி தஸவ்வுப் ஆன்மீகக் கல்வி தொழிற்கல்வியைக் கற்றுத் தரும் "மதரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாசீன்" அறபுக் கல்லூரியை நிறுவி 10 மாணவர்களிலிருந்து இன்று நூறு மாணவர்கள் பயில வசதி செய்து "யாஸீனிய்" எனும் பட்டமும் வழங்கி நிர்வகித்து வருவது.

38. அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை நிறுவி சமூக சேவை செய்து வருவது.

39. எழுபத்து நான்கு வயதிலும் சற்றும் ஒய்வின்றி பல நாடுகளுக்குச் சென்று வருவதுடன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டே இருப்பது.

40. மிகவும் எளிமையாக உடை அணிவது.

41. தங்கள் பணிகளை தாங்களே செய்து கொள்வது.

42. விருந்தினர்களை அவர்கள் வியந்து மலைக்கும் வண்ணம் கவனித்து கவுரவிப்பது.

43. பாராட்டு முகஸ்துதி அறவே வெறுப்பது.

44. முரீதுகளுக்கு தாங்கமுடியாத அமல்கள் அவ்ராதுகள் என அதிகச்சுமைகளை சுமத்தாமலிருப்பது.

45. ஏழைகளின் அழைப்பை ஏற்று அவர்களின் இடத்துக்கேசென்று துஆச் செய்து மகிழ்விப்பது.

46. குழந்தைகள்மீது பேரன்பு செலுத்துவது குழந்தைகள் வலிமார்கள் என்று இதுவரை யாரும் சொல்லாத உண்மையை எடுத்துரைத்தது.

47. முரீதுகள் அண்ணன் தம்பிகளைவிட ஆதரவான உறவு உள்ளவர்கள் என அறிவித்தது.

48. பணக்காரர்கள் ஏழைகளின் வீட்டில் பெண் எடுப்பது.

49. உலகை வெறுக்கத் தேவையில்லை. உலகம் இன்னதெனப் புரிந்து நன்கு படித்து - நன்கு சம்பாதித்து சொந்த வீடு வாகனங்கள் என மகிழ்ச்சியாக வாழ்வதோடு ஏழைகளை நன்கு கவனித்து உதவி செய்து உயர்த்த வேண்டும் என உரைத்து அதன்படியே முரீதுகள் வாழச் செய்வது.

50. எந்த நேரத்திலும் மனம் சோர்வடையாமல் எந்த ஓர் இலக்கையும் தைரியமாக அடையஊக்கம் தருவது.

51. அவர்களின் கரம் பிடித்தவர்கள் எவரும் இருந்த நிலையிலிருந்து இறங்காமல் மேலே மேலே முன்னேற அறிவுரை தருவது.

52. முரீதுகளைப் பல ஆபத்துகளிலிருந்து கண்கூடாகக் காப்பாற்றி வருவது.

53. கொடிய நோய்களான தீர்க்க முடியாத நோய்களை நீக்கி சுகவாழ்வை அருள்வது.

54. குழந்தைவரம் கேட்டவர்களுக்கு அவர்கள் நம்பியபடி குழந்தை பாக்கியத்தை பெற வைப்பது.

55. ஞான விளக்கத்தில் முதிர்ந்தவர்களாக தங்கள் முரீதுகளை உயரச்செய்தது.

56. எமக்கு கூட்டம் தேவையில்லை. எம்மிடம் ihஅத் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஞானத்தை விளங்கி இறைவனை அறிந்து வாழ்ந்தாலே போதுமென்பது.

57. உள்ளே மஃரிபத்தும் வெளியே ஷரீஅத்தும் நிறைந்த முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்பது.

58. புதிய சுன்னத் வல் ஜமாஅத் பரிசுத்தமான சமுதாயம் அமைய வேண்டும் என ஆசைப்படுவது.

59. அனைத்து மார்க்கங்களின் அடிப்படையான ஞானத்தைச் சிந்தித்து அதில் மனிதர்கள் ஒன்றுபட்டால் வேற்றுமைகளற்ற ஒற்றுமையான மனித சமுதாயம் உருவாகும் என வழிகாட்டுவது.

60. தொழுகையில் பல எண்ணங்கள் வருகின்றன அதை நீக்க வழி என்னவென்று வினவியபோது அந்த எண்ணமும் ஹக்கே என எண்ணிவிடுவதே அதற்குரிய வழி என்று விடைபகர்வது.

61. ஹக்கும் ஹல்கும் இரும்பும் நெருப்பும் போல என காலம் காலமாக ஞானிகள் கூறிவந்த உதாரணத்திற்கும் மேலாக அது ஒருவகை படித்தரமே ஆனால் உயர்ந்த நிலை கடலும் அலையும்போல இருப்பதுதான் ஹக்கும் ஹல்கும் என தெளிவுபடுத்துவது.

62. எதை எதையோ பாவம் என நினைத்திருக்க தன்னை அறியாதிருப்பதே பாவம் என தெளிவுபடுத்துவது.

63. ஹக்கு வெளியாகி இருக்கும் ஹ+வல்ஆன கமாகான என்பதனை சுருக்கமாக "தானே தன்னில் தானானான்" என சுலோகமாக்கியது.

64. இறைவன் எப்போதும் மறவாமலிருக்க எந்நேரமும் திக்ரு செய்யுங்கள் என சுப்ஹானல்லாஹ் - மாஷா அல்லாஹ் - அல்ஹம்துலில்லாஹ் எனவெல்லாம் வரிசையாக அச்சிட்டுப் பள்ளிகளில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் அனைத்திலும் ஹக்கைக் காண்பதே ஹக்கை கணந்தோறும் மறவாமல் இருப்பதற்குரிய வழி யென்று நயமாக உரைப்பது.

65. மனிதன் இருக்கும்போது அவனுக்கு அறிவுண்டு எனக்கருத வேண்டாம் இறந்தாலும் அவனுக்கு அறிவுண்டு என அறிவுறுத்துவது.

66. ஹக்கின் ஒன்றிப்பே சுவர்க்கம் என சொர்க்கத்தை அறிமுகம் செய்வது.

67. பொருள்களில் வித்தியாசம் காணாதிருப்பதே ஃபாவில் முதல்படி என ஃபனா நிலையை விபரிப்பது.

68. ரசூல்(ஸல்) அவர்கள் தம் உடலை கவனித்தால் அவர்கள் ஹக்கின் அப்து. ஹக்கின் பகுதிகளில் ஒருபகுதி. அவர்கள் தம் சூக்குமத்தையும் தூலத்தையும் சேர்த்துக் கவனிக்கும் போது ஹக்கான(இறையின் பூரணத்)தோன்றல் என பெருமானார் (ஸல்) அவர்களின் அகமியத்தை உணர்த்துவது.

69. கவலையும் வேண்டாம் சந்தோசமும் வேண்டாம் ஹக்கே நமக்கு வேண்டும் என வாழ்க்கை வழிகாட்டுவது.

70. உலக வாழ்க்ககையை தவ்ஹிதில் சிந்தித்தால் எல்லாவற்றிலும் மோட்சம் காணலாம் என உரைப்பது.

71. எப்போதும் நேர்மையாக நடக்கவேண்டும் என வலியுறுத்துவது. கோபம் பொறாமை தற்பெருமை இவற்றை ஒழித்தே தீரவேண்டும் என வற்புறுத்துவது.

72. தொழுகையை சந்தோசமாக தொழச் சொல்வது.

73. முரீதுகள் எப்போது நினைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் உயிரோடு உயிராக கலந்து அணுவோடு அணுவாக பதிந்து எந்த சந்தேகமுமின்றி உதவிக்காப்பது.

74. இந்த நூற்றாண்டுக்கு நாமேயுள்ளோம். இனி நமக்குப் பின் வரும் நூற்றாண்டுகளும் நம் பார்வையிலேயே நடைபெறும். எம்மை இந்த ஜமானில் அண்டியவர்கள் பெறும் பேறு பெற்றவர்களே!
எம்மைவிட்டு கைசேதப்பட்டவர் எம்மைப் போன்றவர் இதற்கு பின்னால் எவரும் தோன்றமாட்டார். இதுவே ஹக்கின் பஷாரத் (நன்மாராயம்)ஆகும் என முத்திரை பதித்தது.....!


நன்றி---- ஆலிம் புலவர்

நன்றி--- மறைஞானப்பேழை

குருவை அறிவது எப்படி.?

கேள்வி: ஆன்மீகத் தேடல் உள்ள ஒரு மனிதன் தன் குருவை எப்படி அடையாளம் கண்டுக் கொள்ளமுடியும்.?

பதில்: ஓரு குருவிடம் பேசிப்பார்க்கலாம். பேசும்போது உரியமாதிரி முறையோடு பேசவேண்டும். அப்போதுதான் தான் யாரென்பதைக் காட்டிக்கொடுப்பார் அல்லாமல் அதற்கு மாற்றமாய் போய் பேசினால் பொதுவாய் ஆலிம்களுடன் பேசுவதைப் போலிருக்கும். ஆலிமுடன் பேசுவதைப்போன்று பேசி அனுப்பிவிடுவார்கள்.
அறியவேண்டும் என்ற நோக்கத்தோடுச் சென்றால் அவர்களோடு பேசுவதைக் கொண்டு அவர்கள் ஞானம் தெரிந்தவர்கள், விளங்கியவர்கள் ஒரு செய்குகிற்கு பொருத்தமானவர்கள் எனக் கண்டுப்பிடித்துக் கொள்ளலாம்.
சிலநேரங்களில் தேட்டம் உள்ளவர்கள் மித்தம் விருப்பத்தோடு எனக்கு ஒரு காமிலான (பூரணமான) செய்கை (குருவை) நீ எனக்கு காட்டியருள்வாய் யா அல்லாஹ் என்று துவா (பிரார்த்தனை) செய்தால் கனவில் காட்டித்தருவதும் உண்டு. கனவில் காட்டப்படுவதுதான் மிகவும் நல்லது.
படேஷா ஹஜ்ரத் இருந்தார்கள் (அவர்களை) மஞ்சுவி நாயகம் என்பார்கள். சிறந்த வலீயாக அவர்களுடைய காலத்தில் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அரபி படித்தவர்கள் அல்ல. ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து வேலைப் பார்த்தவர்கள். திடிரென அவர்களுடைய நிலமையெல்லாம் பலவகையிலும் மாற்றங்கண்டு சில விசயங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.

பொது மக்களுக்கு ஒரே குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இவரொரு உம்மி (படிப்பறிவு இல்லாதவர்) அரபியல்லாதவர் இவருக்கு என்னத் தெரியும் என்றெல்லாம் கூறினார்கள். ஆலிம்கள் அதற்கு எதிர்ப்பு காண்பித்தார்கள்.
மிகச்சிறந்த ஒரு ஆலிம் அப்துல் கரீம் என்பவர் அதற்கு (மஞ்சுவி நாயகத்திற்கு) பத்வாவும் கொடுத்து விட்டார்.
அப்துல் கரீம் ஆலிம் (தனக்கு) ஒரு செய்கு (குரு) தேவை என அல்லாஹ்விடம் துவாச் செய்துவிட்டு அவர் படுக்கின்றபொழுது ஒரு கனவு தென்படுகிறது. கனவில் படேஷா ஹஜ்ரத் போகிறார்கள். உடனே எழுந்து நெஞ்சினில் துப்பிவிட்டு மறுபகுதியில் திரும்பப் படுக்கின்றார்கள். (மீண்டும் கனவில்) படேஷா ஹஜ்ரத்தான் போகிறார்கள். மீண்டும் எழுந்து மறுபகுதிக்கு திரும்பிபடுக்கிறார்கள். அப்போதும் படேஷா ஹஜ்ரத் அவர்கள்தான் போகிறார்கள்.

காலத்திற்கு உள்ளவரைத்தான் கனவுகாட்டும். இவர்களுக்கு மிகவும் மனம் குழம்பிவிட்டது. அவர்களை நேரில் சென்று பார்க்கும் வேளையில் அவர்கள் (படேஷா ஹஜ்ரத்) கேட்கிறார்கள் விளங்கிவிட்டிர்களா.? என்று.
மிகப்பெரிய ஆலிம் (அப்துல்கரீம் படேஷா ஹஜ்ரத்) அவர்களுக்கு ஹித்மத் (பணிவிடைகள்) செய்யக்கூடியவராக பின்னாலில் இருந்தார்கள்.
எங்கள் தந்தை தேவ்பந்தில் ஓதிவிட்டு வருகிறார்கள். தேவ்பந்த் ஆலிம் ஒருவர் வந்துள்ளார் என்று ஊரெல்லாம் பேச்சு. அவர்களுக்கு வயது 20 – 21 இருக்கும். ஆலிம்களெல்லாம் படேஷா ஹஜ்ரத்தைப்பற்றி கூறி பழைய பத்வாவிற்கு தந்தையுடைய கையெழுத்தும் வாங்கிவிட்டார்கள். தந்தையும் கையெப்பம் போட்டுவிட்டார்கள்.
திடிரென ஒரு நாள் கனவில் காண்கிறார்கள் தந்தை ஆகயத்தில் சும்மா இருப்பதைப் போன்றும் இடுப்பிலிருந்து கீழ்வரை இருட்டுக்குள் இருப்பது போன்றும் மேலாக ஒளிவு தெரிவதைப்போன்றும் ஒரு காட்சி. ஆனால் அதற்கு மேலாக செல்ல வழியே இல்லை. அப்படியே இருந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தந்தை நான் இவ்வளவு கஷ்டத்தோடும் துன்பத்தோடும் இருந்தேன். எனக்கு வந்து உதவிச் செய்த நீங்கள் யார்.? எனக் கேட்கிறார்கள்.
அப்போது அவர்கள் சொன்னார்கள் நான் இந்த காலத்திற்குரிய ஜமான் சாஹிப் ஜமான். என்னுடைய பெயர் பதுருத்தீன் சாஹிப் என்றுச் சொல்லிவிட்டு மறைந்து விட்டார்கள்.
படேஷா ஹஜ்ரத் அவர்களின் பெயர் பத்ருத்தீன் இதுதான் செய்திபென்பதை தந்தை அறிந்துக் கொண்டு பத்வாவைக் கேட்டு தாங்கள் இட்ட கையொப்பத்தை நீக்கிவிட்டார்கள். இதுபோன்று கனவில் தென்படுவது முக்கியமானது.
ஒருவருடைய படிப்பறிவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாது. படிப்பில்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஞானத்தைக் கொண்டுதான் காணமுடியும். இப்போதுள்ள தரீக்காக்கள் எல்லாம் ஞான விளக்கங்கள் கொடுப்பதில்லை.!

- இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்கள்.

நம்மைப்போன்ற மனிதரல்ல நாயகமே...

"நம்மைப்போன்ற மனிதரென-
நீ நாயகத்தை என்னாதே
பொய்மையும் உண்மையும்
நன்மையும் தீமையும்
பொதுவென்று சொல்லாதே
அல்லாஹ்வின் தூதரை நீ
அறியாமல் பேசாதே
ஆகாத பழித்தேடி
அடிவாங்கி சாகாதே".........

இந்தபாடலை எழுதியவர்
திண்டுக்கல் ஆலிம் புலவர் உசேன்முஹம்மது மன்பஈ ஹக்கியுல் காதிரி

இசைவேந்தர் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி பாடிய பாடலை பாடியுள்ளார்.

ஆடியோ பாடலை படங்களுடன் வீடியோ படுத்தி உள்ளேன்...கேட்டு மகிழுங்கள்...


இஸ்லாமிய சிறப்பு தினங்கள்

ஸபர்

10. கீழக்கரை ஸதக்கதுல்லா அப்பா (ரலி) கந்தூரி
14. காயல் தைக்கா ஸாஹிப் கந்தூரி
15. கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா கந்தூரி
28. இமாம் ஹஸன் (ரலி) கந்தூரி
29. ஒடுக்கத்து புதன்



ஷவ்வால்

1 ஈதுல் ஃபித்ர்

14 மேலப்பாளையம் ஷாதுலி நாயகம் (ரலி) கந்தூரி

15. உஹதுப் போர்

ஹம்ஸா (ரலி) ஷஹீது

16. வாப்பா நாயகம் அவர்களின் பிறந்த தின விழா



ரஜப்

1 ஹஸன் பஸரீ (ரஹ்) மறைவு

கல்வத்து நாயகம் (ரஹ்) மறைவு

4 இமாம் ஷாஃபிஈ (ரஹ்) மறைவு

5 மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) மறைவு

14 ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரலி) மறைவு

15 இமாம் ஜஃபர் ஸாதிக் (ரஹ்) ஷஹீத்

மதுக்கூர் ஷைகு ஃபரீத் வலீ (ரலி) கந்தூரி

27 புனித மிஃராஜ் இரவு



ஜமாதுல் அவ்வல்

14 கோட்டாறு ஞானியார் அப்பா (ரஹ்) கந்தூரி

15 குணங்குடி மஸ்தான் ஸாஹிப் (ரஹ்) கந்தூரி

17 பொதக்குடி நூர் முஹம்மத் (ரலி) கந்தூரி

பதீவுத்தீன் ஸிந்தா மதார் (ரலி) மறைவு

22 மேலப்பாளையம் அஹ்மத் கபீர் ரிஃபாயீ (ரலி) கந்தூரி

25 கீழக்கரை மஹானந்த பாபா (ரலி) கந்தூரி

24 மண்ணடி பத்தேஹ்ஷா மஸ்தான் உரூஸ்

29 காலித் இப்னு வலீத் (ரலி) மறைவு

ஜமாதுல் ஆகிர்

1 நாகூர் கொடியேற்றம்

5 ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) மறைவு

10 நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரலி) கந்தூரி

14 இமாம் கஸ்ஸாலி (ரலி) மறைவு

17. காயிதே மில்லத் (ரஹ்) மறைவு

22 அபூபக்கர் சித்தீக் (ரலி) மறைவு


துல்கஃதா

10 ஏர்வாடி தர்ஹா கொடியேற்றம்

17 யாஸீன் மவ்லானா (ரலி) கந்தூரி

18 க்வாஜா பந்தே நவாஸ் (ரலி) கந்தூரி

22 கல்வத்து நாயகம் (ரலி) கந்தூரி

23. ஏர்வாடி சுல்தான் இப்ராஹீம் (ரலி) கந்தூரி

துல்ஹஜ்

2 நாகூர் யூஸுஃப் தாதா (ரஹ்) கந்தூரி

4 பொதக்குடி சர்தார் அப்துல் கறீம் (ரஹ்) மறைவு

9 அரஃபா தினம்

10 ஈதுல் அல்ஹா

16 கோவளம் தமீமுல் அன்ஸாரி (ரலி) கந்தூரி

18 கலீஃபா உதுமான் (ரலி) ஷஹீது

முஹர்ரம்

1 ஹிஜ்ரீ ஆண்டு பிறப்பு

நபி ஆதம் (அலை) மறைவு

2 நபி இப்றாஹீம் (அலை) மறைவு

ஹள்ரத் ம்ஃரூபுல் கர்கீ (ரலி) ஷஹீது

4 இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) மறைவு

5 பாபா ஃபரீதுத்தீன் கன்ஸெஷக்கர் (ரஹ்) மறைவு

6 நபி ஜகரிய்யா (அலை) மறைவு

10 இமாம் ஹுஸைன் (ரலி) ஷஹீத் & ஆஷூரா தினம்

13 இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) மறைவு

15 பாசிப்பட்டினம் நைனார் முஹம்மத் (ரஹ்) கந்தூரி

29 ஷாஹ் வலியுல்லாஹ் (ரஹ்) மறைவு

ஷஃபான்

2 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) மறைவு

5 இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) உதயம்

6 இமாம் அப்துர் ரஹ்மான் நஸயீ (ரஹ்) மறைவு

15 புனித பராஅத் இரவு

16 சென்னை ஸையது மூஸா ஷாஹ் காதிரி (ரஹ்) கந்தூரி


ரமளான்

3 உம்முல் முஃமினீன் பாத்திமா (ரலி) மறைவு

10 உம்முல் முஃமினீன் கதீஜா நாயகி (ரலி) மறைவு

14 அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்) மறைவு

15 இமாம் ஹஸன் (ரலி) உதயம்

திருச்சி நத்தர்ஷா (ரலி) கந்தூரி

16 உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) மறைவு

17 பத்ருப் போர்

21 கலீஃபா அலீ (ரலி) ஷஹீது

22 இமாம் இப்னு மாஜா (ரஹ்) மறைவு

27 லைலத்துல் கத்ர் இரவு

ரபீவுல் ஆகிர்

11 முஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) மறைவு

25 பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி) மறைவு

28 முஹிய்யுத்தீன் இப்னு அறபி (ரலி) மறைவு

முஹர்ரம் பத்தாம் நாள் – ஆஷூரா அன்று:

o நபி ஆதம் (அலை) அவர்களின் பாபம் மன்னிக்கப்பட்டது.
o நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பல் கரை சேர்ந்தது.
o நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் சுவனம் சென்றார்கள்.
o நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் எறியப்பட்ட நெருப்பு பூங்காவாகியது.
o நபி தாவூத் (அலை) அவர்களின் பிழை பொறுக்கப்பட்டது.
o நபி சுலைமான் (அலை) அவர்கள் மீண்டும் ஆட்சி பெற்றார்கள்.
o நபி அய்யூப் (அலை) அவர்கள் நோய் நீங்கி நலம் பெற்றார்கள்.
o நபி மூஸா (அலை) அவர்களுக்கு நைல் நதி பிளந்து வழி விட்டது.
o நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேறினார்கள்.
o நபி ஈஸா (அலை) அவர்களை காத்தான்.
o இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் ஷஹீதாகி குடியாட்சித் தத்துவத்திற்கு உயிர்கொடுத்தார்கள்.

நன்றி- M.J.சாதிக்

ஆதியானவன் அந்தமானவன்

கேள்வி: திருமறையில் அவனே ஆதியானவன் அவனே அந்தமானவன் அவனே வெளியீடானவன் அவனே உள்ளீடானவன் என்று வசனம் வருகிறது இதற்கு பொருள் என்ன…?

பதில்: ஒளியானவனும் அவன்தான் தஸ்பியாகவும் தன்ஸியாகவும் இருக்கிறான். அதாவது வெளியானவன் உள்ளானவன் எனச் சொல்வது…

அவனுக்கு ஒரு ஆரம்பமுமில்லை அவனுக்கு ஓரு முடிவுமில்லை.
வல் அவ்வலு- அவனே தான் ஆரம்பம். ஆரம்பமே இல்லாத ஆரம்பம்
முடிவு இல்லாத முடிவு .
அதுதான் அல்லாஹ்தாலாவுடைய சக்தியெனச் சொல்வது.
ஆரம்பம் போய்க் கொண்டே இருக்கும்.

நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் பார்ப்போம்.
எங்கே முடியும் …முடியும் முடியும் என்று பார்த்தால் முடிவு போய்க் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் பூமியை சுற்றிவருகிறீர்கள் என்றால் ஒருபகுதியில் இருந்து மறு பகுதிக்கு வந்துவிடுகிறீர்கள். ஆனால் இதற்கு அப்படி இல்லை. மேலே போனால் போனது தான். அந்த பவனம் இருக்கும் வரையில் சுத்திக் கொண்டிருக்கும். அதற்கு மேலே தாண்டிப்போனால் அதுபோய் கொண்டே இருக்கும். அவ்வளவுதான். கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். பயந்து விடுவீர்கள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்களுக்கு(நம்மால்) ஒரு குறிப்பிட்ட இடத்தைப்போய் சந்திக்க முடியும். குறிப்பிடாத இடம் ஒன்று இருக்கின்றபோது எப்படிச் சந்திக்க முடியும்,?
அது நெடுக போய்க் கொண்டே இருக்கும். அதற்கு முடிவேயில்லை. எந்தப்பக்கத்தால் போனாலும் சரி பூமிக்கு கீழால் போனாலும்சரி. பூமிக்கு மேலாக போனாலும் சரி பூமிக்கு கீழ்மேல் என்று இல்லையே… அது சுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் (நாம்) மேல்நோக்கி பார்க்கின்ற இடத்தில் மேலாகத் தெரிகிறது. கீழ்நோக்கிப் பார்த்தால் கீழாகத்தெரிகிறது. நாங்கள் (நாம்)
எப்படி இருக்கிறோம் ? நேராக நிற்கின்நோமா…? இல்லை…
தலைக்கீழாகத்தான் நிற்கிறோம்…
வெளவாலைப் போன்று நிற்கிறோம். பூமியினுடைய சக்திதான் எங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் போகாது. எவ்வளவு தூரம் சென்றாலும் கீழேதான் விழுவீர்கள். ஆனால் நிற்பது தலைக்கழால்தான். அதனால்தான் மனிதன் தலைக்கீழாய் போகிறான். தலைக்கீழால் போகக்கூடாது. என்பதற்காகத்தான் அல்லாஹ் இந்த அறிவை தந்திருக்கிறான். பயப்படாதீர்கள். ஒருகாலும் விழமாட்டிர்கள் அல்லாஹ் காப்பாற்றுவான்…
நாங்கள் (நாம்) கவனிப்பதில்லை பாருங்கள். வெளவால் மரத்தில் தொங்குகிறது. நாங்கள் (நாம்) பூமியில் தொங்குகிறோம்.
பெரிய பெரிய கட்டுமானங்கள் கோபுரங்கள் எல்லாம் மறுபக்கம் திரும்பித்தான் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. பாருங்கள் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சக்தியை அதற்கு நிகர் எதுவுமில்லை…

- இமாம் கலீல்அவுன் மௌலானா

ஈத்முபாரக் வாழ்த்துக்கள்....

ஈத்முபாரக் வாழ்த்துக்கள்.... 20.9.2009 அன்று காலை அமீரகத்தில் பெருநாள் தொழுகை காலை 6.30 மணிக்கு துவங்கியது...பல்லாயிரமக்கள் ஈத்பெருநாள் தொழுகையில் கலந்து சிறப்பித்தார்கள்....
தொழுகைக்குப்பின் வழக்கம்போல் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் காலை 8.30 மணிக்கு அனைத்து ஆன்மீகசகோதரர்களும் ஒன்று கூடி தௌஃபாஹ் (பாவமன்னிப்பு) துவா ஒதி அனைவரும் ஒருவருக்கொருவர் முஸாபாசெய்து தங்களின் பரஸ்பர அன்பினை வெளிப்படுத்திக் கொண்டனர்....

மௌலானாமார்களும் நிர்வாகிகளும் அனைவருக்கும் தங்களின் வாழ்த்துக்களை சமர்ப்பித்தனர்...
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல்அவுன் மௌலானா அவர்கள் அனைத்து முரீத் பிள்ளைகளுக்கும் தங்களின் ஆத்மார்த்தமான ஈத்பெருநாள் வாழ்த்தினை தெரியப்படுத்தினார்கள்...
அனைவருக்காகவும் வேண்டி எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் துவாச் செய்வதாகவும் கூறினார்கள்....

அனைவருக்கும் ஈத்முபாரக்....













புனிதமிகு புர்தா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 18.09.2009 அன்று அஸர் தொழுகைக்குப் பின் புர்தா நிகழ்ச்சியும் அத்துடன் இஃப்தார் நிகழ்ச்சியும் நடைப் பெற்றது.
இவ்விழாவில் மௌலானாமார்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தினரும் லால்பேட்டை ஜமாத்தினரும் மற்றும் திருநெல்வேலி ஜமாத்தினரும் கலந்து சிறப்பித்தார்கள்.
புர்தா ஒதி முடித்ததும் சொற்பொழிவு நிகழ்வு ஆரம்பமானது…
புஸ்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் பத்ருத்தீன் அவர்கள் புர்தாவுடைய வரலாற்றை மிகத் தெளிவாக கூறினார்கள்.

புர்தாவை இயற்றிய இமாம் ஷர்புதீன் முஹம்மதுல் பூஸிரி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 608-ல் பிறந்து சுமார் 87 ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்து 696-ம் ஆண்டில் மறைந்துள்ளார்கள்.
இவரது தந்தையின் பெயர் ஸயீது. புhட்டனார் பெயர் ஹம்மாது இவரது முன்னோர்கள் வடமேற்கு ஆப்ரிக்காவில் ஸன் ஹாஜத் என்ற ஊரில் குடியிருந்தார்கள். பின்னர் அந் நாட்டைத் துறந்து எகிப்து தேசத்தில் வந்து அல்பூஸீர் என்னும் ஊரில் குடியேறினார்கள்.அங்கு இவர்கள் ஹிஜ்ரி 608-ம் ஆண்டில் பிறந்தார்கள். அங்கேயே இளமையில் திருக்குர்ஆனையும் மனனம் செய்தார்கள். பின்னர் எகிப்து தலைநகரிலுள்ள பிரபல அரபி சர்வ கலாசாலையான ஜாமிஉல் அஜ்ஹரில் கல்விபயின்று பலகலைகளிலும் தேர்ச்சியுற்று இலக்கண இலக்கியத்தில் வல்லுனரானார்கள். அப்பால் எகிப்து அரசாங்கத்தில் உத்தியோகமேற்றார்கள். இப்பதவி காலம் முடிவடைந்த பிறகு இவர்களுக்கு பாரிசவாய்வு நோய் ஏற்பட்டது. இதனால் இவர்கள் சுகவீனமடைந்தார்கள்.படுத்தபடுக்கையிலிருந்து கொண்டே புர்தாஹ் என்னும் இக்காவியத்தை பாடினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்அலை) அவர்கள் அன்னாரது சொப்பனத்தில் தோன்றி தங்களது திருக்கரத்தால் அவரது உடலைத் தடவியதோடு தங்களது போர்வையையும் அவர்மீது போர்த்தினார்களென்றும் அக்கணத்திலேயே ப+ரண சுகமடைந்து எழுந்து நடமாட சக்தி பெற்றார்கள். என்று வரலாறு கூறுகிறது.

இந்த புர்தாவின் கவி வசனங்கள் மக்காவிலும் மதினாவிலும் ரவ்லாஷரீபிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஓவ்வொரு முஸ்லிமும் தங்கள் இல்லங்களிலும் புர்தாவை ஓதிவந்தால் அவர்களுக்கு பிடித்த பீடையும் பலா முசீபத்துகளும் அல்லாஹ்தால பெருமானார் (ஸல்அலை) அவர்களின் பொருட்டால் நீக்கிவிடுகிறான்.
என்று கூறினார்கள்.

அடுத்து பேசிய பொதுச் செயளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக்கூறினார்கள்.அவரைத் தொடர்ந்து திருமுல்லைவாசல் சையதnலி மௌலானா அவர்கள் நோன்பின் மகத்துவத்தை இரத்தின சுருக்கமாக உரைநிகழ்த்தினார்கள்.
சபைத்தலைவர் சஹாபுதீன் அவர்கள் ஷெய்குநாயகத்தின் பண்புகளையும் ஷரிஅத்தின் அவசியத்தையும் கூறினார்கள்.
நன்றி உரை இஸ்மத் நிகழ்த்தினார்.
வந்திருந்தசிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு துணைத்தலைவர் கிளியனூர் முஹம்மது சபீர் வழங்கினார்


இஃப்தார் நிகழ்ச்சிக்கு பின் மஃஹ்ரிப் தொழுகை நடைப்பெற்றது.
இவ்விழாவில் ஆன்மசகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இன் நிகழ்ச்சிகளை அதிரை அப்துல்ரஹ்மான் நிழல்படத்தையும் திருச்சி ஜெகபர் சாதிக் வீடியோ கவரேஜ்சும் செய்தார்கள்…இன் நிகழ்ச்சி இன்pதே நிறைவுப்பெற்றுத.

அனைத்திலும் அனைத்துமாய்……

இறைவா…!
நீ என் நம்பிக்கையில்
நிழலாடுகிறாய்
நீ என்பது நம்பிக்கை மட்டும்தானா?

எதையும்
கண்டு உண்டு தொட்டு முகர்ந்து
புணர்ந்து…இப்படி
வாழ்ந்துக் கொண்டிருக்கும்
எனக்கு
அருபமான உன்னை
என் மனக்கண் முன்
உருவம் கொடுத்து
பார்க்க முடியுமா?
அப்படிப் பார்த்தால்
உருவத்திற்குள் உன்னை
மட்டுப்படுத்தி
கட்டுப்படுத்தி
மிகப் பெரியவான உன்னை
சிறுமைப்படுத்தி விடுவதாகுமே…!

கல்லைவைத்து
கடவுளை காண்கிறார்கள்
சிலர் சொல்லை வைத்து உன்னை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
இந்த இருவருக்கும்
என்ன வித்தியாசம்?

கையேந்தி உன்னிடம்
கேட்கும் போதும்
கையை மேலே காட்டி
பேசும் போதும்
தனிமையான உன்னை
நான்
தனிமைப் படுத்தி விடுவதல்லவா…!

வணக்கத்தின்போது
என்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
அல்லது
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பது போல்
வணங்கச் சொல்கிறாய்
அப்படியானால்
நீ என்பது எண்ணமா?

உன் திருநாமத்தை
உச்சரித்தால்
நல்லடியார்களின் உள்ளம்
நடுங்கும் என்கிறாய்
அப்படியானால்
நீ என்ன அச்சமா?

எந்த அடியானாவது
தன் தூக்கத்தை விட்டு
பின்னிரவில் எனக்காக எழுந்து
வணங்குகின்றானா?
அடிவானத்திலிருந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று வேறு படுத்தி கூறுகின்றாய்
நீயென்ன துவைதமா?

என் பிடரியின் நரம்பிற்கும்
சமீபமாய் இருக்கும்
உன்னை
நான் விளங்காதபோது
உன் வேதத்தை படித்துவிட்டு
போதனை செய்வதால்
நான் என்ன விளக்கவாதியா?
விளக்கமே இல்லாமல்
விழுந்து விழுந்து
உன்னை வணங்கிக் கொண்டிருப்பதால்
நான் என்ன வணக்கவாதியா?

வேதத்தை தந்தது
வேடம் களைவதற்குத் தானே
வேதம் படித்திருக்கிறேன் என்று
வாதம் செய்வதற்கா.?
வேடத்தை களைக்காமல்
வேதத்தையே படித்துக்கொண்டிருப்பதால்
நான் என்ன சீர்திருத்தவாதியா…?

ஒற்றுமையென்னும் கயிற்றை
பலமாக பற்றி பிடிக்கச் சொன்னாய்
பிரிந்திருப்பவைகளை
ஒன்றுப்படுத்துவதுதானே ஒற்றுமை
அதுதானே ஏகத்துவம்
இதில் இருக்கிறதே பல தத்துவம்
அந்த கயிற்றை பலமாகப்பிடிப்பதற்கு
அவர்களின் கைகளில் பலமில்லையே…!

நெருப்பையும் களிமண்ணையும்
வேற்றுமைப் படுத்திய
ஷைத்தானின் எண்ணம்
நீவேறு
உன் படைப்பினங்கள் வேறு என்று
ஒற்றுமையை துவைதப்படுத்திக் கொண்டிருக்கிறது.
உன்னை வேறுபடுத்துவதால்
அவர்களிடம் ஒற்றுமையில்லை

ஷைத்தானின் கைகளில்
வேதமிருப்பதால்
அப்பாவி கண்களுக்கு வேதம்தானே தெரிகிறது
வழிகெடுக்கப்படுவதை
அவர்களின் விழிக்கூட நம்ப மறுக்கிறதே…!

ஒரே சமுதாயமாக
வாழவேண்டியவர்கள்
ஒரு ஊருக்குள் பலபிரிவினர்களாக
பிரிக்கப்படுகிறார்கள்
ஒற்றுமையிலிருந்து சிதைக்கப்படுகிறார்கள்
இறiவா
நீ எங்கோ இருந்துக் கொண்டு
இயக்குவதாய் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்களின் உள்ளத்தில் தெளிவில்லை
அதனால்
எண்ணத்தில் தூரமிருக்கிறது.

நீ அனைத்துமாக
அனைத்திலும் நீயாக இருந்து
இயங்குகின்றாய்
அனைத்திலும் நீ இருக்கும்போது
அந்த அனைத்தில் நானுமிருக்கிறேன்
இதை
எப்போது விளங்கப்போகிறார்கள்.?

-கிளியனூர் இஸ்மத்

அம்பலம்


'பித்தன்' 'பித்தன்' என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.

நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.



நான் காயப்பட்டேன்.

நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.

ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.

அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.

திரைகள் விலகின.

எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.

முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.

காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.

உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.

அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.

அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.

ஏன்?என்றேன்.

அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.

அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.

அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.

நான் அவர்களுடைய
அம்பலம்.

கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.

அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.

காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.


நன்றி….கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து…

இறையறியாமல் இணைவைத்தலிருந்து தப்பமுடியாது…



கேள்வி: இணைவைத்தல் (ஷிர்க்)என்றால் என்ன…?

பதில்: இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வை ஒன்று இரண்டு மூன்று நான்கு எனப் பிரிக்கப்படுவது. அடுத்து அல்லாஹ் அதுபோலத்தான் இதுமாதிரித்தான் என்று சொல்வதும் இணைதான் ஷிர்க்தான். விளங்குவதற்க்காக சில உதாரணங்களை சொல்லவேண்டிய சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அது அதுவல்ல. அதை தெரிந்துக் கொண்டு சொல்லவேண்டியது. அப்படிச் சொல்வது ஷிர்க்.
படிப்பிப்பதற்காக சில உதாரணங்களை காட்டினால்தான் அது தெரியும். இல்லாவிட்டால் தெரியாது.
பூரணமாக இருக்கிறான் அல்லாஹ் என்பதை விட்டுவிட்டு தனித்தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிட்டால் அது ஷிர்க்.
அல்லாஹ் எங்கும் இருக்கிறான்(என்று) இதை எல்லோரும் சொல்வதுதான். எல்லோரும் (இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை)ஒப்புக் கொள்கிறார்கள்.
எங்கும் இருக்கிறான் என்றால் எப்படி இருக்கிறான்…?
எங்கும் பரிப்பூரணமாய் பின்னிப் பிணைந்து மாற்றமில்லாமல் பிரிக்க முடியாது இருக்கிறதுதான் ஹக் (இறைவன்).
தனியாக ஒரு மனிதனைப் பார்த்து கடவுளென இறைவனெனச் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் அது ஷிர்க். அதை முஷ்ரிக்கீன்கள் என்று சொல்வது.
‘இன்ன ஷிர்கானில் அலீம்’ -ஷிர்க்காவது மிகப்பெரியப் பாவம்.அதுக்கு எந்த வகையான தவ்பாவும் இல்லை. அல்லாஹ் இரண்டு என்று சொல்லிவிட்டால் ஷிர்க்காயிற்று.
அல்லாஹ் ஒருவன்தான் என்றால் ஷிர்க் போய்விட்டது.
அதற்கு மேலாக சென்று அது எப்படியென பேசுவது தவ்ஹிதுடைய இல்மு (ஞானம்) அதைப்பேசும் நேரத்தில் மித்தம் கவனமாக பேசவேண்டும்…!